Header Ads



UNP யில் மேர்வின் போட்டி, மாடுகளை கொலைசெய்து விற்பதற்கு எதிரானவன் என்கிறார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். 

லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனரத்னவின் நலம் விசாரிப்பதற்காக மேவின் சில்வா இன்று அங்கு வருகைதந்திருந்தார். 

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் தான் போட்டியிடும் சின்னம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

´இலங்கையின் எந்த பகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றிப்பெறுவேன். நான் சிங்கள பௌத்தன். 

பௌத்த தர்மத்திற்கமைய வாழ்ந்த தர்மபால மன்னன் மாட்டு இறைச்சி உண்பதற்கு எதிரானவர் அதேபோல் நானும் மாடுகளை கொலை செய்து விற்பனை செய்வதற்கு எதிரானவன். 

அதனை செய்வதை தடுப்பதே எனது பிரதான கடமை. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை சரியான முறையில் நிர்வகித்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மக்கள் துன்பத்தை எதிகொண்டால் நான் மக்கள் பக்கமே இருப்பேன். 

எனினும் அரசியல் ரீதியாக மீண்டும் ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட போவதில்லை´ என்றார்.

1 comment:

  1. என்னை கூப்பிட்டால் போய் அவர்களுடன் இணைந்து கொண்டு அரசியல் செய்வேன்.அல்லது நான் சனாதிபதியின் வீட்டுக்குப் போய் வாசலில் நின்று கொண்டிருக்க எனக்கு வெட்கமில்லை. உள்ளே அழைத்தால் போவேன். கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிப்பேன். அவர்கள் இணங்கினால் நான் அவர்களுடன் இணைந்து வேண்டுமானால் மாடு வெட்டுவதைத் தடைசெய்யவும் பின்னிற்கமாட்டேன். ஏனென்றால் முன்பு சனாதிபதி அவர்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து முழுமையாக அறுத்து பெக்கட் பண்ணிய இறைச்சியை இறக்குமதி செய்து கோடான கோடி கமிசன் அடிக்க முயற்சி செய்யும் திட்டத்தின் ஒரு கட்டமாக மாடு வெட்டுவது பௌத்தத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என வேண்டுமானால் நான் நாட்டு மக்களுக்கு எடுத்துரைந்து அந்த அவுஸ்ரேலிய மாட்டுஇறைச்சி வியாபாரத்தை சிறப்பாக நடாத்திச் செல்வேன். எனக்குரிய கமிசனை பெரியவர் தந்தால் சரி.

    ReplyDelete

Powered by Blogger.