Header Ads



ரணிலுக்கு கட்சியின் ஆலோசகர் பதவியுடன், தேசியப்பட்டியல் Mp யும் வழங்க யோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கட்சியில் இருந்து நீக்காது அவருடன் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கு வழங்க கூடிய மாற்று பதவி சம்பந்தமாக சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி உள்ளார் என சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

கட்சியில் ஆலோசகர் போன்ற பதவியை உருவாக்கி அதனை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தேசிய பட்டியலில் உள்ளடக்கி அவருக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, ரணில் விக்ரமசிங்கவின் அனுபவத்தை கட்சியை வலுப்படுத்த தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என கூறியுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.