Header Ads



எங்களை வீதிவீதியாய் அழைய விடுவேன் என்ற, மைத்திரி Mp யாகி என்ன செய்யப் போகிறார்...?

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த போது பொலன்னறுவை மாவட்டத்திற்கு பெறுமதியான எந்த சேவைகளையும் செய்யாத மைத்திரிபால சிறிசேன, அடுத்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகித்து என்ன சேவையை செய்ய போகிறார் என்ற கேள்வி எழுவதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் புதிய கட்சியை ஆரம்பித்தால். வீதி வீதியாய் அழைய விடுவேன் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்தும் போது, எமது பசில் ராஜபக்ச சிறையில் இருந்தவாறு கட்சியின் கொள்கையை உருவாக்கி நாங்கள் கட்சியை ஆரம்பித்தோம்.

பொலன்னறுவையில் நிறைய வேலைகளை செய்ய வேண்டியிருக்கின்றது. பொலன்னறுவைக்கு எதுவும் நடக்கவில்லை. தீ பெட்டிகள் போன்று கட்டிடங்களை மாத்திரம் நிர்மாணித்தனர். எந்த தேசிய வேலைத்திட்டங்களும் அந்த மாவட்டத்திற்கு வரவில்லை.

அந்த மாவட்டத்தில் இருந்து ஜனாதிபதி தெரிவானாலும் பல்கலைக்கழகம், அதிவேக நெடுஞ்சாலை, குறைந்த சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் குடிநீர் திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

பாடசாலையில் இடவசதியின்றி பிள்ளைகள் வாசல் கதவில் அமர்கின்றனர். பாடசாலை, பிரதான வைத்தியசாலை, நகர அபிவிருத்தி என்ற எந்த முன்னேற்றத்தை அன்று ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன செய்யவில்லை.

ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொலன்னறுவைக்கு எதனையும் செய்யாத அவர், நாடாளுமன்ற உறுப்பினராகி என்ன செய்ய போகிறார் என்பதே கேள்வி.

இதனை பொலன்னறுவை மற்றும் நாட்டு மக்கள் புரிந்துக்கொள்வார்கள் என்றே நான் கூற முடியும். தேர்தலுக்கு வந்து கண்ணீர் கதைகளை கூறி மக்களை ஏமாற்ற முயற்சிப்பார். அதற்கு ஏமாற வேண்டாம் என்பதை விசேடமாக கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் மொட்டுச் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடுவோம். கட்சியை ஆரம்பித்தால் வீதி, வீதியாய் நடக்கவிடுவேன் என்று கூறியவர்கள் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட தார்மீக உரிமை இருக்கின்றதா என்ற கேள்வி எனக்கு இருக்கின்றது எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.