Header Ads



பாராளுமன்றத்தில் செவிட்டு Mp க்களும் உள்ளனர், பிக்குமார் அரசியலில் உள்வாங்கப்படுவது பௌத்தத்திற்கு நிந்தை

பௌத்த மதத் தலைவர்களும் பிக்குககும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை அளிப்பதா இல்லையா என்ற முடிவினை அரசியல் கட்சிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பவ்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் பௌத்த பிக்குமார்கள் உட்பட மதத்தலைவர்கள் அரசியலில் உள்வாங்கப்பட்டதால் பௌத்த மதத்திற்கு பெரும் நிந்தை ஏற்பட்டதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது உரையாற்றிய அவர், பௌத்த பிக்குமார்கள் உட்பட மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதன் ஊடாக அந்தந்த மதங்களுக்கே பேரவமானம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் மதத் தலைவர்களுக்கு வாக்குரிமை கூட இல்லை. ஆனால் அவர்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு நான் உடன்படவில்லை. எனினும் மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் கட்சி அரசியலை செய்யக்கூடாது. விகாரை, தேவாலயம் என்பது மக்களின் பொதுவான ஸ்தலமாகும்.

ஆகவே அவர்கள் ஒரு மக்கள் பிரிவிற்கான பிரதிநிதியாக செயற்படுவதற்கான உரிமை இல்லை. அவர்கள் எப்போதுமே அரசியல் பிரிவுகளுக்கு அப்பால் இருக்க வேண்டும். நாட்டிற்கு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

ஆனால் இன்று அரசியல் கட்சிகளின் பிரிவினர்களாக மதத்தலைவர்கள் உள்ளனர். அரசியல் தலைவர்களுக்கு மேலே இருப்பதைவிட அவர்கள் கீழே இருக்கின்றார்கள். மகாநாயக்க தேரர்கள் அதனைப் புரிந்துகொண்டுள்ளனர். விசேடமாக மதத்தலைவர்கள் அரசியலுக்கு உரித்துடையவர்கள் அல்லர் என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

விகாரையின் தேரர்கள் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உரித்துடையவர்கள் என சொல்லக்கூடாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மிகவும் சிந்திக்க வேண்டும். இந்த நிலைமை எதிர்காலத்திலும் தொடர்ந்தால் மதத்தலைவர்களின் கௌரவவே சிதைந்துவிடும்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் காதுகேளாத உறுப்பினர்களும் இருப்பதாக குறிப்பிட்டதோடு இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு தற்போதைய அனுபவம் வாய்ந்த பழைமை அரசியல்வாதிகளே தடையாக இருப்பதாகக் கூறினார்.

அரசியல்வாதிகளின் வயது குறித்த பிரச்சினை நிலவுகிறது. அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருக்கத்தான் வேண்டும். எனினும் கடந்த காலங்களில் சக்கரநாற்காலியில் சென்ற போதிலும் அரசியலை கைவிடமனதில்லாதவர்கள் இருந்தார்கள்.

இளைஞர்களுக்கு சிந்தனை, புதிய கொள்கைகள் இல்லையா? அவர்களுக்கு சந்தர்ப்பமும் இலக்குகளும் இல்லையா? ஏன் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க மறுக்கிறார்கள்? இன்று அரசியல் தலைவர்கள் பதவிகளை கைவிட மறுக்கிறார்கள். இன்று நாடாளுமன்றத்திலும் ஓய்வு செல்ல வேண்டிய எத்தனை பேர் இருக்கிறார்கள். காது கேட்காதவர்கள் எத்தனை பேர் உள்ளனர். இதற்கும் ஒரு நிர்ணயம் இருக்க வேண்டும்.

ஒருவரது உடல்நிலை, மனநிலை, தீர்மானம் எடுக்கும் சக்தி, உடல் ஓய்வு என்பதை அடிப்படையாகக் கொண்டே அரச ஊழியர்களுக்கு 55 தொடக்கம் 60 வயது எல்லை ஓய்வூதிய வயது என்று காணப்படுகின்றது.

எனினும் எமக்காக கொள்கைகளை வகுப்பவர்கள், அரசியல்வாதிகளுக்கு அப்படியொரு வயதெல்லை கிடையாது. 35 வயதுவரை ஜனாதிபதியாக முடியாது என்று எமது நாட்டில் சட்டம் உள்ள போதிலும் சர்வதேச மட்டத்தில் 35 வயதுகொண்டவர்கள் எத்தனை பேர் ஜனாதிபதியாக இருக்கிறார்கள் என கேள்வியெழுப்பினார்.

1 comment:

  1. Mp களுக்கான ஓயவூதிய முறை உணடியாக அமுலில் வரும் படி இல்லாதொழிக்க வேண்டும். அதுக்குத்தான் இவன் கல் ஒரு முறையாவது mp ஆக முயட்சிக்குறான்.

    ReplyDelete

Powered by Blogger.