Header Ads



ரணிலுடன் இனிமேல் பயணிக்க முடியாது - பின்வரிசை Mp க்கள் கொந்தளிப்பு

(ஆர்.யசி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தொடர்ந்தும்  பயணிக்க முடியாது, தலைமைத்துவ முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு இல்லையேல் தாம் தனித்த பயணம் ஒன்றினை முன்னெடுக்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் வலியுறுத்துவதுடன் தமது தீர்மானத்தை  எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது எழுந்துள்ள தலைமைத்துவ முரண்பாடுகளை அடுத்து தலைமைத்துவ மாற்றம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் .

எனினும் ரணில் தரப்பினர் இது குறித்து அதிகமாக செவிமடுக்காத வகையில் உள்ளதை அடுத்து கட்சியின் இரண்டாம் நிலை மற்றும் பின்வரிசை உறுப்பினர்கள் இடையில் பாரிய கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் பாரளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தாம் அதிருப்தியில் இருப்பதாகவும், தலைமைத்துவ மாற்றம் ஒன்றினை அவசியமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கூறியுள்ளனர்.

இதே கருத்தில் தொடர்ச்சியாக உறுதியாக நின்று கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்துமாறு சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் மீண்டும் பாராளுமன்ற குழு கூடிய வேளையிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ மாற்றம் குறித்து தீர்வு எடுக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாம் தரப்பு மற்றும் பின்வரிசை உறுப்பினர் தமது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம் குறித்து பின்வரிசை உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன எம்.பியிடம்  வினவியமைக்கு அவர் கூறியதானது,

நாம் இதுவரை காலமாக ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கியுள்ளோம். அவர் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது. எனினும் இப்போது கட்சியின் தலைமைத்துவத்திற்கு அவர் பொருத்தமில்லாத நபர். அவர் கடந்த 25 ஆண்டுகளாக கட்சியின் தலைமைத்துவத்தை வைத்திருந்தும் கட்சியை பலப்படுத்த தவறிவிட்டார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாம் தோல்வியை சந்திக்கவும் இதுவே காரணமாக அமைந்தது. எனவே இப்போது புதிய தலைமைத்துவ மாற்றம் ஒன்று வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றார். 

No comments

Powered by Blogger.