Header Ads



ரணில் வெளியேற, 52 Mp க்கள் ஆதரவாக வாக்களிக்க, கட்சித் தலைவரானார் சஜித், யாப்புக்கு ஏற்புடையதா என சர்ச்சை. Exclusive (வீடியோ இணைப்பு)

- Anzir -

ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம்,  கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில்
மிகுந்த பரபரப்புக்கிடையே நடந்து முடிந்துள்ளது.

கூட்டம் ஆரம்பமானவுடன், ரணில் மீது நம்பிக்கையில்லை எனவும், அவர் அவர் பதவி விலக வேண்டுமெனவும் கட்சியின் ஒரு தரப்பு எம்.பி.க்கள் வாதிட்டுள்ளனர்.

இந்நிலையில் கட்சித் தலைவர் யாரென, வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேலும் ஒரு தரப்பினர் தர்க்கித்துள்ளனர்.

இவற்றுக்கிடையே வாக்கெடுப்பு நடாத்த வேண்டாமென, ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென, ரஞ்சித் மத்தும பண்டாரா பிரேரிக்க, ஹரீன் பெர்ணான்டோ ஆமோதித்துள்ளார்.

இதன்போது ரணில் விக்கிரமசிங்க, கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

ரணிலுடன் சேர்ந்து ஆசு மாரசிங்க, வஐர அபயவர்த்தனா உள்ளிட்ட சிலரும் அச்சமயத்தில் வெளியேறியுள்ளனர்.

ரணில் ஆதரவு எம்.பி.க்களாக தம்மை காட்டிக்கொண்ட ரவி கருலாநாயக்கா, தயா கமக்கே ஆகியோர் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றுள்ளனர்.

இதன்போது வாக்கெடுப்பு நடக்க தயாரானபோது, வாக்கெடுப்பு வேண்டாம். இது கட்சியை பிளவுபடுத்தும் என ரவி கருணாநாயக்கா வாதிட்டுள்ளார்.

எனினும் திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடந்துள்ளது. 

கூட்டத்திலிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர், சஜித் பிரேமதாசா கட்சியின் தலைவராக தெரிவாக வாக்களித்துள்னர். ரணிலுக்கு ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தனது முகநூல் பதிவில், சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கு ஒருமனதாக நாடாளுமன்றக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின் படி, கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற குழுவுக்கு இல்லை என வாதிடப்பட்டுள்ளது. கட்சித் தலைவரை கட்சியின் Working Committee தேர்ந்தெடுக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐதேக. க்குள் புதிய சர்ச்சை, வெடிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.



No comments

Powered by Blogger.