Header Ads



Dr ஷாபிக்கு எதிரான, மீள்விசாரணை மகிழ்ச்சியளிக்கிறது - எமது எதிர்ப்பு முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல, ரத்ன தேரர்

 (ஆர்.விதுஷா)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகபேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மீள ஆரம்பித்தமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய  குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை,  இந்த வழக்கு விசாரணைகளின் உண்மைத்தன்மை  நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கு  எதிரான போராட்டமல்ல மாறாக அடிப்படை வாத குழுக்களுக்கு எதிரானது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வைத்தியர் ஷாபிக்கு  எதிரான வழக்கு விசாரணைகள் இன்று -16- வியாழக்கிழமை  குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினரும்  நீதி மன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தேரர் இதனை தெரிவித்தார். 

அவர்  மேலும் கூறியதாவது  ,  

மேற்படி வழக்கு  விசாரணைகளின் போது சுயாதீனத்தன்மை பேணப்படவில்லை என்றே கூறமுடியும். ஏனெனில் 800 இற்கும் அதிகமான தாய்மார்  பாதிக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கு விசாரணைகள் முறையாக இடம் பெறவில்லை. 

இந்நிலையில், கடந்த அரசாங்கம்  மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம்  ஆகியன பணத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட்டுள்ளனவா என்ற கேள்வி  எழுகின்றது. மேலும் ஏனையவர்கள் மீது குற்றம் சுமத்தி உண்மையான  குற்றவாளியை விடுவிக்கும் முயற்சியிலேயே ஷானி அபேசேகர மற்றும் பொலிஸ் பரிசோதகர்  நிஷாந்த சில்வா ஆகியோர் முயற்சித்தனர் என்றார். 

ஏனெனில்  இந்த விடயம்  தாய்மாருக்கு வெறுமனே  இடம் பெற்ற செயல் அல்ல  . மாறாக அனைத்து சமூகத்திற்கும் பாதிப்பை  ஏற்படுத்தக்கூடியதான விடயமாகும். ஆகவே, இது தொடர்பில்  அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தம்புள்ளை  வைத்தியசாலையிலும் இவ்வாறான சில  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆயினும்  இது வரையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. அத்துடன், இதனூடாக   வைத்திய சாலைகளில் இடம் பெறும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே, இவ்வாறான  விடயங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டமல்ல மாறாக அடிப்படை வாத குழுக்களுக்கு எதிரான  போராட்டமே ஆகும்

1 comment:

  1. துவேச நச்சைக் கக்கும் இந்த ஒருஜினல் காபிரை சிறைக்கூட்டில் அடைக்க இந்த நாட்டில் ஒரு முஸ்லிமாவது இல்லையா என்ற ஆதங்கம் அனைத்து முஸ்லிம்களையும் வாட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.