Header Ads



Dr ஷாபிக்கு மீண்டும் பணி, நியமனத்தை வழங்க பரிந்துரை

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகபேறு மருத்துவர் மொஹமட் ஷாபிக்கு மீண்டும் பணி நியமனத்தை வழங்க பரிந்துரைக்குமாறு அரச சேவைகள் ஆணைக்குழு, சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதை மருத்துவர் ஷாபியை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அவருக்கு எதிராக குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்ததுடன், வழக்கில் அவரை சந்தேகநபராக மாத்திரம் சேர்த்துள்ளனர்.

குறித்த நீதிமன்ற அறிக்கை மற்றும் சுகாதார அமைச்சின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மொஹமட் ஷாபிக்கு மீண்டும் பணி நியமனத்தை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அவருக்கு பணி நியமனம் வழங்குவது விசாரணைகளுக்கு தடையாக இருக்காது என சுகாதார அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. நீதியானதைச் செய்யுங்கள் நீதியின்படி நடவுங்கள். நீதிக்கு எதிராக நடக்கும்போது அந்த நீதியே உஙகளை தாறுமாறாகக் கிழித்து எறிந்து விடும். அது உடனடியாக நடத்தப்படமாட்டாது. ஆனால் அது நடத்தப்படும். விளைவுகள் உங்களுக்கும் இருக்கும்; உங்களோடு சேர்ந்திருப்போருக்கும் ஏன் உஙகள் குடும்பத்தவர்களுக்கு கூடவாகிலும் இருக்கலாம். கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
    Source: Justice kills slowly by Adam Smith, A philosopher

    ReplyDelete

Powered by Blogger.