Header Ads



பௌத்த மதத்துடன் தொடர்புகளை வலுப்படுத்த ஐதேக திட்டம் - எதிர்க்கட்சி பணிகளை ஆரம்பித்தார் சஜித்


பௌத்த மதத்துடனான ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி, கட்சியை மீள விரிவுபடுத்துவதற்கான ஒரு தொடக்கமாக இன்று போயா தினத்தில் பௌத்த போதனைகளுடன் சஜித் பிரேமதாச அவரது பணிகளை ஆரம்பித்திருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதச இன்று -10- கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பௌத்த மதவழிபாடுகளுடன் தனது பணிகளை ஆரம்பித்தார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நான் பௌத்தனுக்குரிய போதனைகளைப் பின்பற்றும் அதேவேளை, என்னால் இயன்றவரை அதன்படி செயற்பட்டும் வருகிறேன். நான் விகாரைக்குச் செல்லும்போது முழுமையாக வெண்ணிற ஆடையணிந்து, பூக்களுடனும் கமராக்களுடனும் செல்வதில்லை. அவரவர் மதங்களின் பிரகாரம் ஒவ்வொருவரும் வாழ்வது சிறந்ததாகும் என்றும் அவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. சஜித் இன்னொரு பிரேமதாசதான். அவர் ஜனாதிபதி சென்றபாதையில்போய் வெற்றிபெறலாம் என கனவு காண்கிறார். கட்ச்சியில் நீடிக்க வாய்ப்புகள் லிறைவு.

    ReplyDelete

Powered by Blogger.