Header Ads



இப்படியும் ஒரு, ரதன தேரர்

மதம் கடந்து நல்லதொரு "மனிதராக" வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆத்மீகத் துறவி ரதன தேரர்.

இளம் வயதில் துறவறம் பூண்டு இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தமிழ் மக்களுடன் இதய சுத்தியுன் உறவைப் பேணி தமிழ் மக்கள் சமகாலத்தில் படும்முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக சவால்களைக் கண்டு மனம் வருந்தி உண்மையை உணர்ந்துள்ள துறவி.

தற்காலத்தில் அவ்வாறு துறவறம் பூண்டு ஏனைய மக்களின் மனங்களைப் புண்படுத்திக் கொண்டிருக்கும் துறவிகள் மத்தியில் இவர் "சேற்றில் முளைத்த செந்தாமரைதான்"

இவர் உறவு வைத்துள்ள பெரும்பாலானோர் தமிழர்களே.

சரளமாக தமிழ் மொழி பேசும் இவர் ஹொரணைப் பகுதியொன்றிலுள்ள பாடசாலையில் தமிழ் ஆசிரியராகக் கடமை புரிந்து கொண்டிருக்கிறார்.

இவருடன் இன்று தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நான் பெரும் மகிழ்ச்சிஅடைகிறேன்.

இவருடைய தமிழ் மொழித் திறமையைக் கண்டு வியப்புற்றேன்.
இலங்கைத் தமிழ் மக்கள் படும் துன்பங்களை எண்ணி மனம் வருந்தினார்.

அவ்வாறு அவருக்கு தமிழ் மொழி தெரிந்த படியாலே அவரின் மன உட்கிடக்கை என்னவென்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. 

அவருடனான கருத்துப் பகிர்விலிருந்து அறியப்பட்டதொன்று என்னவென்றால்; தமிழர்களும் சிங்களவர்களும் மொழியால் மட்டுமே வேறுபாடு கொண்டவர்கள் என்றும் இலங்கை வரலாற்றில் இரு இனத்தவரும் அன்புடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்தபோது குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல் வாதிகளே தங்கள் சுயநலத்திற்காக பிரித்தாண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கூறி கவலையடைந்தார்.

இப்படியான புத்த துறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஓர் ஆன்மீகவாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் தேரரே.
Shivapalan Shivapalan

2 comments:

  1. தமிழர்களின் தற்போதைய நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று தெரியவில்லை.முஸ்லீம் களின் நிலைமையும் நாளுக்கு நாள் மோசமாகத்தான் செல்கிறது.முஸ்லீம் களாகிய நம்மிடம் ஆக்கிரமிப்பு or அடக்குமுறை செய்யணும் என்றோ துளி கூட எண்ணம் கிடையாது நமது நோக்கம் மறுமையில் எல்லாரும் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்பது மாத்திரமே.. இதை சொன்னால் முஸ்லிம்கள் தீவிரவாதிகலாம்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.