Header Ads



சீனாவில் இலங்கை மாணவர்கள் அவதி, உணவுக்கு தட்டுப்பாடு - சமைத்த உணவை உண்ண மறுப்பு

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸால், வூஹான் நகரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் உணவுக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் சேமித்து வைத்த உணவுகள் முடிவடைந்ததால், உணவு பெறுவதில் பெரும் சிரமங்களை  எதிர்நொக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இலங்கை அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான விற்றமீன் மாத்திரைகள், உணவுகள் என்பவற்றை துரிதமாக வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக, வெளிவிவகார  மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மாணவர்கள் அங்கு வழங்கப்படும் சமைத்த உணவுகளை உண்ண மறுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இலங்கை மாணவர்கள் பற்றி அரசாங்கம் எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைப் பாராட்டுகின்றோம். ஆனால் வேறு எந்த ஒரு நாட்டில் நெருக்கடி நிலைமைகள் வந்தபோது இலங்கையர் தொடர்பாக இவ்வளவு ஆர்வமாக அரசாங்கம் செயற்பட்டதில்லை. சீன வைரஸ் பிரச்சினையின் இரகசியம் அந்த மாணவர்களில் அங்கு மருத்துவம் கற்கும் விமல் வீரவன்ஸவின் மகன் இருக்கின்றான்.அது தான் இலங்கையர் விடயத்தில் இவ்வளவு ஆர்வமும். அரசாங்கத்தின் கவனமும்.

    ReplyDelete

Powered by Blogger.