Header Ads



ரூமி மொஹமட்டின், பிணை மனு நிராகரிப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இணைந்து சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில்  வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான தகவலை வெளிப்படுத்திய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள முதலிரண்டு சந்தேக நபர்களுக்கும், அச் சந்திப்பில் கலந்துகொள்ள தலா 10 இலட்சம் ரூபா வீதம் 20 இலட்சம் ரூபாவை ரூமி மொஹம்மட் வழங்கியதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் கடந்த 31 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். 

அதன் பின்னர் ரூமி மொஹம்மட் அன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட போது நீதிவான்,  அவரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.