Header Ads



முஸ்லிம் கட்சிகள், எமக்கு எதிராகவே உள்ளன - பிரசன்ன

 பொதுத் தேர்தல் படுதோல்வியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க நேரிடுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது,     

பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள் எமக்கு எதிராகவே உள்ளன.

   பெப்ரவரி 28 இன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க வாய்ப்புள்ளது. அடுத்த தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்று ஜனாதிபதியின் கொள்கைகளைச் செயற்படுத்துவோம். அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

   அரசாங்கத்தின் நல்ல முன்னெடுப்புக்களுக்கு ஒத்துழைப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சி கூறினாலும், பின்னால் குழிபறிக்கும் பணியையே அக்கட்சி செய்யும்.

   சண்டையிட்டு ஜனாதிபதி வேட்பாளரானான அவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற்றுள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரைத் தேட நேரிடும் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

1 comment:

Powered by Blogger.