Header Ads



முஸ்லிம்களுக்கு மட்டுமான சட்டத்தை நிராகரித்தது போன்று, கண்டியன் சட்டத்தையும் நீக்க வேண்டும்

கண்டியன் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை நீக்குவதற்கான பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது. 

இன்று சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் ஒன்றுகூட உள்ள நிலையில் இதன்போது குறித்த பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் அத்தரலியே ரத்ன தேரரினால் சமர்பிக்கப்பட உள்ளது. 

இந்த விடயம் தொடர்பில்  கருத்து தெரிவித்த அவர், தனிப்பட்ட பிரேரணையாக கண்டியன் விவாக சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் விஷேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமான நீதிமன்ற முறையை நிராகரித்தது போன்று கண்டியன் விவாக சட்டத்தையும் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் முஸ்லிம் விவாக சட்டம் மட்டுமல்லாது கண்டியன் விவாக சட்டத்தையும் நீக்குவதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார். 

3 comments:

  1. இவனுக்கு கலியானம் முடிக்க இயலாத பொறாமையில் வேலை செய்கிறான், உன்னை யாருடா காவி உடுக்க சொன்னது?

    ReplyDelete
  2. இந்த சக்கிலிச் சாமி இந்த நாட்டு சட்டம் சிறுபான் மையினருக்கு வழங்கியுள்ள சட்ட ரீதியான சலுகையை மறுக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றான். இவனுக்கு எதிராக மனித உரிமைக்குச் செல்ல இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் இல்லையா"?

    ReplyDelete
  3. Good Athuraliya rathana thero..
    Plz don't give up your stand in this islamic laws

    ReplyDelete

Powered by Blogger.