Header Ads



"ரஞ்சனை மனநல வைத்தியரிடம், அனுப்புவதே சிறந்தது"


நாட்டின் நலன் கருதியும் நாடாளுமன்றிலுள்ள 224 உறுப்பினர்களின் நலன் கருதியும் மற்றும் ரஞ்சன் ராமநாயக்காவின் நலன் கருதியும் அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்புங்கள் என கோரிக்கை முன்வைத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றிலுள்ள 224 உறுபபினர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் நான் கூறுகின்றேன் சுவிஸ் தூதரக பெண் பணியாளரை பரிசோதித்தது போன்று ரஞ்சன் ராமநாயக்கவையும் மனநல வைத்தியரிடம் அனுப்பி பரிசோதிக்க வேண்டும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் தாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என ஒருபோதும் தெரிவித்தது கிடையாது.சிலவேளை ரஞ்சன் ராமநாயக்க தனக்குண்டான நோய் குறித்து அறியாமலும் இருக்கலாம்.

எனவே அவரை மனநல வைத்தியரிடம் அனுப்புவதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.