Header Ads



மருத்துவப் சோதனைக்காக சொந்த, செலவில் சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி

இந்த மாத இறுதியில் மருத்துவப் பரிசோதனைக்காக, சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்த பயணத்திற்கான செலவுகளை சொந்த பணத்தில் இருந்து செலுத்த தீர்மானித்துள்ளார்.

இந்த பயணத்திற்கான எந்த செலவுகளையும் அரசாங்கம் செலுத்தக் கூடாது என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஜனாதிபதியின் விமான பயணச்சீட்டு மட்டுமல்லாது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்காக பயணச்சீட்டு, ஹோட்டல் கட்டணம், மருத்துவமனை கட்டணம் என்பன ஜனாதிபதியின் சொந்த பணத்தில் செலுத்தப்பட உள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தமது தனிப்பட்ட செலவுகளை தாமே ஏற்க வேண்டும் என்ற கொள்கையை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

1 comment:

  1. He owns part of Appolo hospital in Colombo. Doesn’t he trust the services rendered by his own hospital?
    By the way, savings from the salary alone when he was the Defence Secretary wouldn’t be enough to pay for all expenses of the entire battalion he is taking with him. Where he got all these money is anybody’s guess.

    ReplyDelete

Powered by Blogger.