Header Ads



சுலைமானியின் படுகொலைக்கான எங்களின் இறுதி பதில், அமெரிக்க படைகளை வெளியேற்றுவதுதான்

அமெரிக்கா படையினரால் கொலை செய்யப்பட்ட ஈரான் புரட்சி தளபதி குவாசிம் சுலைமான் தீவிரவாத இயக்கங்களை எதிராக போர் புரிந்தவர், அவர் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை ஈரான் அதிபர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் புரட்சி தளபதி குவாசிம் சுலைமானியை கொன்ற பின் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றவர் அதுமட்டுமின்றி தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஈரான் இராணுவம், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகளுக்கிடையே மோதல் அதிகரித்து வருகிறது. பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதராவாக குரல் கொடுத்துள்ளன.

இதையடுத்து தற்போது ஈரான் நாட்டின் அதிபர் Hassan Rouhan தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தளபதி குவாசிம் சுலைமானி ஒரு ஹீரோ, அவர் ஐ.எஸ், , Al Nusrah, Al Qaeda போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக போர் புரிந்தவர்.

குவாசிம் மட்டும் தீவிரவாதிகளுக்கு எதிராக நிற்காமல் இருந்திருந்தால், இன்று ஐரோப்பிய தலைநகரங்கள் பெரும் ஆபத்தில் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குவாசிம்மின் படுகொலைக்கான எங்களின் இறுதி பதில், அமெரிக்க படைகளை பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவது தான் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.