Header Ads



ரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யும் செயற்பாட்டில் முஸ்லிம்கள் தீவிரம்

- Anzir -

முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்துச்செய்யக் கோரி, அத்துரலிய ரதன தேரர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேணைக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்வதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக அதன் ஏற்பாட்டாளர் சமூக ஆர்வலர், மூத்த சட்டத்தரணி Hejaz Hizbulla தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,,

எதிர்வரும் புதன்கிழமை 15 ஆம் திகதிக்கு முன்னதாக, உயர் நீதிமன்றத்தில் ரதன தேரரின் தனிநபர் பிரேணைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். 

ரதன தேரர் தனது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை இலக்குவைத்து இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

எனினும் எந்தவொரு நிலையிலும், ரதன தேரரின் தனிநபர் பிரேணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிடக்கூடாது என்பதில் நாம் திட்டவட்டமாக உள்ளோம்.

இதற்கு முழு முஸ்லிம் சமூகத்தினதும் ஒத்துழைப்பை நாம் நாடுகிறோம். 

வழக்குத் தாக்கலுக்கான பணிகள் அதற்கான வரைபுகள் உள்ளிட்டவைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இதுபற்றிய மேலதிக விபரங்களை, நாம் சமூகத்திற்கு விரைவில் அறிவிப்போம் என்றார்.

8 comments:

  1. 2/3rd majority danger for the gotha govt.

    ReplyDelete
  2. If needed, we must arrange peaceful protests against this bill in every mahalla after Jumma prayer.

    ReplyDelete
  3. All the best Sir.
    He is a devil 😈 in human appearance.
    All Muslims, including political parties should unite at least hereafter.

    ReplyDelete
  4. Alhamdulillah Allah is great . May Allah help our society and Allah give more strength to our society leaders and members to continue this matter l.

    ReplyDelete
  5. ரத்ன தேரருக்கு அடுத்த முறை மீண்டும் யாரும் தேசியல் பட்டியல் கொடுக்கமாட்டார்கல்.அதனால் இப்போது ஆரம்பித்து இருப்பது ஓட்டுக்காக.

    ReplyDelete
  6. Muslim samuhatthikku allahvin thunai aameen

    ReplyDelete
  7. Muslim samuhatthikku allahvin thunai aameen

    ReplyDelete

Powered by Blogger.