Header Ads



விரைவில் கட்சித்தலைமை குறித்த, குழப்பநிலைக்கு தீர்வு - முஜுபுர் ரஹுமான்

(நா.தனுஜா)

ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வ­டைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­மானால் அதனால் ஒரு­போதும் வெற்­றி­ய­டைய முடி­யாது. எனவே கட்சித் தலைமை தொடர்­பான குழப்­ப­நி­லைக்கு சிரேஷ்ட தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து தீர்­வொன்றைக் காண­வேண் டும். அந்­த­வ­கையில் தற்­போது கரு ஜய­சூ­ரிய இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யீடு செய்­தி­ருப்­பதால் விரைவில் இப்­பி­ரச்­சி­னைக்கு முடிவு கிட்டும் என்று நம்­பு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜுபுர் ரஹுமான் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று திங்­கட்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்போது கட்சித் தலை­மையில் தொடரும் குழப்­ப­நிலை குறித்துக் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். இது­கு­றித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

கட்சி உறுப்­பி­னர்கள் வெவ்­வேறு நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருப்­ப­துடன், அதன் விளை­வாக கட்­சிக்குள் சில முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன என்­பது உண்­மையே. ஆனால் தற்­போது கட்­சியின் தலைமை குறித்த பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காணும் விவ­கா­ரத்தில் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்­பி­னரும், சபா­நா­ய­க­ரு­மான கரு ஜய­சூ­ரிய தலை­யீடு செய்­தி­ருக்­கிறார். எனவே இந்த விவ­காரம் இன்னும் இரு தினங்­க­ளுக்குள் முடி­வுக்குக் கொண்­டு­ வ­ரப்­படும் என்று நம்­பு­கின்றோம்.

ஆனால் கட்­சியின் உறுப்­பினர் என்ற வகையில் ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வ­டைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­மானால் அக்கட்சியினால் ஒரு­போதும் வெற்­றி­ய­டைய முடி­யாது என்­பதே எனது நிலைப்­பா­டாகும். எனவே கட்­சிக்குள் காணப்­படும் முரண்­பா­டு­களை விரை­வாகத் தீர்த்­துக்­கொண்டு ஒன்­றி­ணைந்து முன்­நோக்கிப் பய­ணிக்­க­வேண்டும்.

ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தெனின் இரு­த­ரப்­புமே விட்­டுக்­கொ­டுப்­ப­துடன், சில அர்ப்­ப­ணிப்­புக்­க­ளையும் செய்­ய­வேண்டும். அதே­போன்று இவ்­வி­வ­கா­ரத்தில் கட்­சி யின் சிரேஷ்ட தலை­வர்கள் இடையிட்டு தீர்­வொன்றைக் காண்பதற்குரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் தற்போது கரு ஜயசூரிய தலை யீடு செய்திருப்பதன் மூலம் விரைவில் கட்சித்தலைமை குறித்த குழப்பநிலைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் நம்புகின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.