Header Ads



மத்தியகிழக்கில் பதற்றத்தை, அமெரிக்கா தூண்டாமல் இருந்திருந்தால்...!

அமெரிக்கா மட்டும் மத்திய கிழக்கில் பதட்டத்தை தூண்டாமல் இருந்திருந்தால், உக்ரேனிய விமான விபத்தில் உயிரிழந்த கனேடியர்கள் அனைவரும் தற்போது உயிருடன் இருந்திருப்பார்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐஸ்டின் ட்ரூடோ அளித்த பேட்டியில், சமீபத்தில் ஈரான், ஈராக் பிராந்தியத்தில் பதட்டங்கள் மற்றும் மோதல்கள் இல்லாதிருந்தால், கனேடியர்கள் இப்போது தங்கள் குடும்பத்தினருடன் வீட்டிலேயே இருந்திருப்பாரகள்.

தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து கனடாவுக்கு எந்த எச்சரிக்கையும் வரவில்லை.

அமெரிக்கா சொந்தமாக முடிவெடுக்கிறது, பெரிய பிரசினையில் சர்வதேச சமூகமாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சி.

ஆனால் சில நேரங்களில் நாடுகள் தங்கள் நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் விஷயங்களைச் செய்கின்றன என ட்ரூடோ கூறியுள்ளார்.

மேலும், அணுசக்தி அல்லாத ஈரானைக் கொண்டிருப்பது குறித்து சர்வதேச சமூகம் மிகவும் தெளிவாக உள்ளது. ஆனால், பிராந்தியத்தில் அமெரிக்க நடவடிக்கைகளால் ஏற்படும் பதட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரானிய வான் பாதுகாப்புப் பிரிவினால் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், பயணித்த 63 கனேடியர்கள் உட்பட 176 பேர் உயிழந்தனர்.

No comments

Powered by Blogger.