Header Ads



ரணிலை கைதுசெய்து, விசாரணை நடத்த வேண்டும் - டிலான் பெரேரா!

(செ.தேன்மொழி)

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைதுசெய்து அவரிடமே மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

மத்தியவங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேக நபரான அர்ஜூனா மகேந்திரனை திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு செல்லவதாக குறிப்பிட்டு, இவரை நாட்டிலிருந்து வெளியேற உதவியவர் ரணில் விக்கிரமசிங்கவே . பிரதான சந்தேக நபர் இல்லாததால் அவர் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ரணில் விக்கிரம சிங்கவையே கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முறைக்கேடுகள் தொடர்பில் தற்போது சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் அவருக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது , அதனுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது கூறினார்.

2 comments:

  1. வௌிநாட்டு வேலைவாய்புப் பணியகத்துக்கு பொறுப்பான அமைச்சராக டிலான் பணியாற்றிய போது களவாடிய கோடான கோடி பணத்தைத்திருப்பிப் பெறவும் களவுக்கான உச்சத் தண்டனை வழங்கவும் புலனாய்வில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது பொது மக்களின் வேண்டுகோள்.

    ReplyDelete
  2. HE DILAN IS SHOUTING FROM TOP OF THE ROOF.LAST TIME HE LOST IN BADULA DISTRICT AND MADE A NATIONAL LIST MP BY FALLING ON THE FEET OF MY3.EVEN NOW GOTHAPAYA HAS NOT APPOINTED HIM AT LEAST AS A STATE MINISTER.HE IS SHOUTING LIKE THIS TO DRAW THE ATTENTION OF MR.GOTHAPAYA.

    ReplyDelete

Powered by Blogger.