January 13, 2020

எந்தவொரு வெளிநாட்டுப் படைகளும் இலங்கையின் எல்லையைகூட அண்மிக்க இடமளிக்கக்கூடாது

எந்தவொரு வெளிநாட்டுப் படைகளும் இலங்கையின் எல்லையை கூட அண்மிக்க இடமளிக்கக்கூடாது என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 13 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஈராக்கில் அமெரிக்கப் படைகள் குவிந்துள்ளன. படைகளை மீளப்பெறுமாறு ஈராக் வலியுறுத்துகின்றது. எனினும் டொனால்ட் ட்ரம்ப் அதனை நிராகரித்துவிட்டு தற்போது அதனை செய்யமுடியாது என்றும் கூறியிருக்கின்றார்.

ஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை அமெரிக்காவா தீர்மானிக்க முடியும்? ஆகவேதான் அமெரிக்காவுடனான இந்த எம்.சி.சி ஒப்பந்தத்தின் அபாயகர நிலை குறித்து நாங்கள் தெளிவுப்படுத்துகின்றோம்.

எம்.சி.சி ஒப்பந்தமோ அல்லது வேறு ஒப்பந்தத்தின் ஊடாகவோ இந்த நாட்டில் அமெரிக்கா தடம் பதிப்பதற்கு தற்காலிகமாகவும் இடங்கொடுத்தால் ஏற்படும் நிலை ஈராக்கை உதாரணப்படுத்தி புரிந்துகொள்ள முடியும்.

ஆகவே தற்காலிகமாகவும் சரி, இந்த நாட்டில் வெளிநாட்டுப் படைகளை தங்குவதற்கு இடமளிக்கக்கூடாது. அமெரிக்கா இன்று ஏனைய நாடுகளுக்குள் அத்துமீறுவதை பழக்கமாக வைத்துள்ளது.

எனினும் எந்த வெளிநாட்டுப் படைகளுக்கும் எமது நாட்டின் எல்லையை தொடுவதற்கும் அனுமதிக்கக்கூடாது.

மேலும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் விரைந்து ஒரு தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.

4 கருத்துரைகள்:

பருப்பு உறைகளை விமானத்தில் வந்து கீழே போட்டால் அவற்றைத் தடுக்கும் பலமோ சக்தியோ இல்லாத ஒரு நாட்டில் மேலிருந்து குண்டை வீசினால் அதன் விளைவு அழிவும் நாசமும் தான். இந்த வீணாப்போன அரசியல் வங்கரோத்துக்காரன்களின் வாய்ப் பேச்சும் வக்காளத்தும் தான் எஞ்சியிருக்கும்.

முன்னைநாள் தோழர் வாசுதேவாவுக்கு, இலங்கையில் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் மலையக தமிழர் என அனைத்து இனங்களும் ஒற்றுமையாக இருந்தால் மட்டும்தான் வெளிநாடுகளை வெளியில் வைத்திருப்பது சாத்தியம். குறிப்பாக தமிழர் இந்துசமுத்திரத்திலும் சர்வதேச அடிப்படையிலும் மலையக தமிழர் இந்து சமுத்திரத்திலும் முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலும் செல்வாக்குப் பெற்றுள்ள சூழலில் இலங்கை சிங்கள பெளத்தர் நாடு என்கிறதை கைவிடாமல் வெளியார் தலையீட்ட்டை தடுக்க உங்களுக்கு சர்வதேச பலம் அடிப்படையிலோ அறம் அடிப்படையிலோ ஆற்றலும் இல்லை வாய்ப்புமில்லை.
மாஜி தோழரே இலங்கையை சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் மலையகதமிழரின் நாடாக கட்டியெழுப்ப வரும்படி உங்களையும் உங்கள் ஜனாதிபதியையும் சேர்த்து அன்புடன் அழைக்கிறேன்.

Public announcements are different from the real situations.
Srilanka must Welcome USA base here.
It is good for the country for the long term

Ajan we and sinhalese know why u guys calling USA here பிரபாகரனின் அப்பா வந்தாலும் இனி ஒன்றும் நடக்க போவதில்லை

Post a Comment