Header Ads



இலஞ்சம் பெறுபவர்களை, அதேஇடத்தில் கைதுசெய்ய நடவடிக்கை - ஜனாதிபதி ஆலோசனை

அரசாங்க நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை அதே இடத்தில் கைது செய்வதற்கு விசேட நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

மேல் மாகாணத்தை கேந்திரமாக கொண்டு இதற்கென பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதுடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இதன் தலைமை அதிகாரியாக செயற்படுகின்றார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் இந்த பிரிவில் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் இலஞ்சம் பெறுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பல நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.