Header Ads



டிரம்பின் நேரடி உத்தரவில், ஆளில்லா விமானதாக்குதல் - ஈரான் இராணுவத தளபதி, பக்தாத்தில் கொலை (படங்கள்)


பக்தாத்தின் சர்வதேச விமானநிலையத்தில் ஈரானின் மிக முக்கிய இராணுவ அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கான உத்தரவினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரான் முன்னெடுத்த நடவடிக்கைகளிற்கான தளபதியாக விளங்கிய, அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜெனரல் காசெம் சுலைமானி பக்தாத் விமானநிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பிஎம்யூ எனப்படும் ஈரான் சார்பு ஆயுத குழுக்களுடன் ஈரானின் இராணுவதளபதி சென்றுகொண்டிருந்தவேளை இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பிஎம்யூ அமைப்பின் தலைவர் அபுமஹ்டி முகான்டசும் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானின் இராணுவ அதிகாரியும் ஈரான் சார்பு ஆயுதகுழுக்களை சேர்ந்தவர்களும் இரண்டு கார்களில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.

டிரோனிலிருந்து மேற்கொள்ளப்பட்டபல ஏவுகணைகள் கார்களை தாக்கின என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள அமெரிக்க படையினரையும் இராஜதந்திரிகளையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை ஜெனரல் சுலைமானி வகுத்துக்கொண்டிருந்தார் என  பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈரானின் எதிர்கால தாக்குதல் திட்டங்களை முறியடிக்கும் நோக்கிலேயேஇந்த தாக்குதல் இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ள பென்டகன் உலகம்முழுவதும் உள்ள எங்கள் மக்களையும் நலன்களையும் பாதுகாப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் எனவும்தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.