Header Ads



அமெரிக்கர்கள் தங்கள் சடலங்களை, எடுத்துச்செல்லும நிலையை நாங்கள் செய்வோம் - ஈரான்

அமெரிக்கா படைகள் பிராந்தியத்தை விட்டு வெளியேறவில்லை என்றால், அவர்களின் சடலங்களை தான் எடுத்த செல்ல வேண்டிய நிலையை நாங்கள் செய்வோம் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஷம்கானி எச்சரித்துள்ளார்.

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் நேற்று நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் மில்லியன் கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற்றது.

இதையடுத்து இன்று -07- அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஷம்கானி அமெரிக்காவை எச்சரித்து பேசியுள்ளார்.

அதில், அமெரிக்காவின் இந்த கொடூர தாக்குதலால் ஈரான் எந்த மாதிரியான எதிர்வினையை வெளிப்படுத்தும், அமெரிக்கா எந்தளவிற்கு பாதிக்கப்படும் என்று அவர்களுக்கு தெரியும், அதுமட்டுமின்றி ஈரானின் சக்தியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

நடுத்தர் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளால் அவர்களுக்கு பதிலடிக்க கூடும் என்பதால், அமெரிக்காவின் படைகள் தளங்களில் குவிந்துள்ளன.

அதுமட்டுமின்றி அவர்களின் ரோந்து எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அமெரிக்கப் படைகள் எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துவோம், அப்படி அதை அவர்கள் கேட்காமல் தஞ்சமடைய விரும்பினால், படைகளின் தளங்களை அழிப்போம், அதோடு, அவர்களின் இறந்த சடலங்களை தான் எடுத்து செல்ல நேரிடம் என்று எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.