Header Ads



போதைப்பொருளை இல்லாதொழிக்க முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள்


மாணவர்களின் எதிர்காலத்திற்கு சவால் விடுக்கும்   போதைப்பொருளை இல்லாதொழிக்க முப்படையினரும்  அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் எனத் தெரிவித்த பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டின்  பாதுகாப்பு இராணுவத்துடன் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இராணுவத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளின் கல்விக்கான 2019 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசல் வழங்கும் நிகழ்வு இன்று தாமரை தடாக உள்ளக அரங்கில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இராணுவ தளபதி மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

இதன்போது 2018 ஆம் ஆண்டு புலமைப் பரிட்சை, கல்விப் பொதுததாரதர சாதாரண தர பரீட்சை, உயர்தர பரீட்சை களின்  சித்தியடைந்த மாணவர்களின்  கல்வி  செயற்பாடுகளுக்கான நிதியுதவியும், உயர்தர  பரீட்சையில் அதீத  சித்தியடைந்த  09 மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும்  இராணுவ  தளபதியால்  வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.