Header Ads



பிரித்தானிய இஸ்லாமியர்களின் செயல் - பாராட்டு குவிகிறது, ஆங்கில ஊடகங்கள் வரவேற்பு (படங்கள்)


பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த நிலையில், மறுநாள் காலை இஸ்லாமியர்கள் பலர் வீதிகளை சுத்தம் செய்ததைக் கண்டு சமூகவலைத்தளங்களிலும் பலரது பாராட்டி வருகின்றனர்.

உலகில் புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக மக்கள் அதை உற்சாக கொண்டாடி வருவர். அந்த வகையில் இந்த 2020-ஆம் ஆண்டை வரவேற்க பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் மக்கள் ஒன்றாக கூடி வாழ்த்துக்களை தெரிவித்து, மகிழ்ச்சியாக இருந்தனர்.

அப்படி அவர்கள் புத்தாண்டை வரவேற்கும் போது, குப்பைகள் போடுவதுண்டு, அப்படி பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் கிடந்த குப்பைகளை சுமார் 1500 பேர் கொண்ட Ahmadiyya Muslim Youth Association-ஐ சேர்ந்த்வர்கள் சுத்தம் செய்துள்ளனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகமான மெட்ரோ யூ.கே பிரத்யேகமாக வெளியிட்டுள்ள செய்தியில், பிரித்தானியானியாவின் பெரும்பாலான இடங்களில் இவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் குப்பைகளை, புத்தாண்டு தினத்தன்று விடியற் காலையிலே வந்து சுத்தம் செய்ய துவங்கிவிட்டனர்.

இவர்கள் லண்டன், Edinburgh, Glasgow, Walsall, Manchester மற்றும் Cardiff போன்ற நகரங்களில் குப்பைகளை சுத்தம் செய்துள்ளனர்.

இது குறித்து இந்த அமைப்பில் இருக்கும் Imam Qamar Ahmed Zafar என்பவர் கூறுகையில், இது ஒரு நல்ல துவக்கம் மற்றும் சிறு வயது இஸ்லாமிய குழந்தைகளுக்கு இது மனதில் நன்றபடியாக புகுத்தும்.

பெரும்பாலும் மக்கள் புத்தாண்டு துவங்குவதற்கு முந்தைய நாள் மாலையில் இருந்தே கொண்டாட்டத்தை துவங்கிவிடுவார்கள், ஆனால் Ahmadiyya Muslims சபை பிரார்த்தனை செய்வோம், அதன் பின் உலகிற்காக பிரார்த்தனை செய்வோம்.

நாம் புத்தாண்டை வரவேற்று சென்றுவிடுகிறோம், இது நம் சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்ல, நம் இளம் இஸ்லாமியர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமை குறித்து நினைவூட்டல் என்று கூறியுள்ளார்.

இதன் ஒருங்கிணைப்பாளர் Mubashar Raja கூறுகையில், நாங்கள் இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறோம், எங்களுடைய எண்ணம் பிரித்தானியா முழுவதும் என்பது தான், இந்த வருடம் 5,000 பின் பைகளை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


4 comments:

  1. செயல் பாராட்டுக்குரியதுதான். அனால் அவர்கள் வழிகெட்ட காதியானிகள் (காஃபிர்கள்) ஆயிற்றே. எப்படி அவர்களை இஸ்லாமியர்கள் என்று கூற முடியும்!

    ReplyDelete
  2. Ahmadiya solradu kadiyanigal

    ReplyDelete
  3. This is done by Qadiyani community and still we should respect this kind of community service. We may disagree in faith matters but we should respect their good deed. what about Salafi groups? this is not acceptable to them as this good deed comes from Non-Muslim sect......????

    ReplyDelete
  4. சுத்தம் ஈமானில் பாதி

    ReplyDelete

Powered by Blogger.