Header Ads



பள்­ளி­வாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்


கொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்ட விவ­காரம் வரக்­கா­பொல நீதிவான் நீதி­மன்­றத்தில் சுமு­க­மாகத் தீர்த்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு வைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலையை அகற்­று­வ­தில்­லை­யெ­னவும் பள்­ளி­வாசல்வளா­கத்­துக்கும் புத்­தர்­சி­லைக்­கு­மி­டையில் மதில் ஒன்­றினை அமைத்துக் கொள்­வ­தற்கும் முஸ்­லிம்கள் இணக்கம் தெரி­வித்­தனர். முஸ்­லிம்கள் தாம் நீண்­ட­காலம் பெரும்­பான்மை இனத்­த­வ­ருடன் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தா­கவும் இவ்­வி­வ­கா­ரத்­தினால் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­வதை விரும்­ப­வில்லை எனவும் தெரி­வித்­தனர்.

அதற்­கி­ணங்க புத்தர் சிலை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­றப்­ப­ட­மாட்­டாது. புத்தர் சிலைக்கும் பள்­ளி­வாசல் வளா­கத்­துக்­கு­மி­டையில் மதில் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­படும் என வரக்­கா­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார்.

இவ்­வி­வ­காரம் தொடர்­பாக நேற்று முன்­தினம், நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் உட்­பட நிர்­வா­கிகள், அப்­ப­கு­தியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்­த­கர்கள் உட்­பட முஸ்­லிம்கள், மாற்றுத் தரப்பின் சார்பில் அப்­ப­கு­தியைச் சேர்ந்த தலைமை பெளத்த குரு உட்­பட பெரும்­பான்மைச் சமூ­கத்­தினர் வரக்­கா­பொல நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

நீதி­மன்றில் இரு தரப்­பி­னரும் இவ்­வி­வ­கா­ரத்தை சுமு­க­மாகத் தீர்த்­துக்­கொள்­வ­தெ­னவும், புத்தர் சிலையை அகற்­று­வ­தில்லை எனவும் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தனர். முஸ்­லிம்கள் பொறுமை காத்து இணக்­கப்­பாட்­டுக்கு வந்து பெரும்­பான்மைச் சமூ­கத்தின் உணர்­வு­க­ளுக்கு இட­ம­ளித்­த­மைக்கு வரக்­கா­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி நன்­றி­களைத் தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 2 மணிக்கு இடம்­பெற்­றது. புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­ப­கு­தியில் பதற்ற நிலை நில­வி­யது. வரக்­கா­பொல மற்றும் கேகாலை பொலிஸார் அங்கு பாது­காப்பு கட­மை­களை முன்­னெ­டுத்­தனர்.

இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் இணக்­கப்­பா­டொன்­றினை ஏற்­ப­டுத்தி பிரச்­சி­னையை சுமு­க­மாக தீரப்­ப­தற்கு பொலிஸார் முயற்­சித்தபோதும் அது பல­ன­ளிக்­க­வில்லை. பெரும்­பான்மை சமூ­கத்­தினர் புத்தர் சிலையை அங்­கி­ருந்து அகற்­றிக்­கொள்­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­தனர். இதனையடுத்தே வரக்காபொல பொலிஸார் இவ்விவகாரத்தை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்வதற்குத் தீர்மானித்தனர்.

வரக்காபொல நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் 8 ஆம் திகதி இரு தரப்பினரையும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிவான் மேலதிக விசாரணையை ஜூலை 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.-Vidivelli


7 comments:

  1. இதுல சுமூகம் எங்கிருந்து வந்தது... சிங்கள அடக்குமுறையும் முஸ்லிம்களின் கோழைத்தனமும்தான் இருக்கிறது...

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் இந்த இணக்கப்பாடும் பெளத்தர்களின் அமைதியும் இன்றைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இதே பெளத்தர்கள் தங்களின் கோவில் வளாகத்திலேயே முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டியிருக்கிறார்கள் என்று பிரச்சினையை உண்டு பண்ண மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
    உண்மையிலேயே புத்தர் சிலை பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளேதான் வைக்கப்பட்டிருக்குமேயானால் அது சட்டத்தின் மூலம் உடனடியாக அகற்றப்படுவதே சாலச் சிறந்தது.
    அதே நேரம் இனவாத பெளத்தர்கள் இதையே முன்னுதாரணமாக காட்டி இன்னும் பல பள்ளிவாசல்களுக்குப் பக்கத்தில் இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பார்கள் என்பதையும் இந்த முஸ்லீம் சமூகம் உணர முன் வர வேண்டும்.
    முஸ்லீம் சமூகத்தின் அரசியல் வாதிகள், Lawyer Mr. Ali Sabri போன்ற முக்கியமானவர்கள் இவ்விடயத்தில் மெளனம் காப்பது பெரும் கவலையளிக்கிறது.

    ReplyDelete
  3. They may take this decision as example and law to put up Buddah statues in other Muslim areas. Time will answer

    ReplyDelete
  4. what a good idea!
    Soon, whole land will become a Budist Temple

    ReplyDelete
  5. next punidha poomi eanru solli palli 100 m ulla iruka poda eanpanukal adhaum sumuhama accept panra nilail than irukam.

    ReplyDelete
  6. இப்படியே எல்லா பள்ளிகளுக்கும் முன்னால் புத்தர்சிலை முளைக்கும் ஏனெனில் இந்தப் பள்ளியில் முளைத்தது ஏனைய பள்ளிகளுக்கு முன்மாதிரியாக அமையும்.
    சமாதானம் ஐக்கியம் என்ற போலி போர்வையில் கோழைகளின் எடுக்கப்பட்ட முடிவே இது அதாவது சிலையை அப்புறம் படுத்துவதில்லை, மதில் கட்டுவது என்பது.
    இறைவன் நாடினால் அவ்விடத்தில் வைக்கப்பட்ட சிலையை தரிசனம் தேடிவரும் சிலை வணங்கிகளுக்கு பக்கத்தில் உள்ள பள்ளியின் நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாத்திற்கு மதம் மாறவும் வாய்ப்புகள் அமையலாம்.

    ReplyDelete
  7. இப்படி பள்ளிகளுக்கு அருகில் கோயில்கட்டத்தானோ அன்றுஅஜானைப்போல் பாரதியாரும் இப்படி பாட்டெழுதி ஆசைப்பட்டார்.
    "பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்"

    ReplyDelete

Powered by Blogger.