Header Ads



சுலைமானியின் இறுதி, நிமிடங்கள் எப்படியிருந்தன..? விபரித்தார் டிரம்ப்

ஈரானின் முக்கிய இராணுவஅதிகாரி கசேம் சொலைமானி கொல்லப்பட்ட தருணங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  துல்லியமாக விபரித்துள்ளார்.

குடியரசுக்கட்சியின் நிதிவழங்குநர்களின் முக்கிய கூட்டத்தில் டிரம்ப் நடந்ததை துல்லியமாக வர்ணித்தார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

சொலைமானி அமெரிக்கா குறித்து மோசமான விடயங்களை தெரிவித்தார்,இதன் காரணமாகவே அவரை கொலை செய்ய உத்தரவிட்டேன் என  டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு அசிங்கங்களை தான் நாங்கள் செவிமடுப்பது என கேள்விஎழுப்பியுள்ள டிரம்ப் சொலைமானியால் ஏற்படவிருந்த உடனடி ஆபத்து என்னவென்பதை தெரிவிக்கவில்லை.

சொலைமானி கண்காணிப்பிலிருந்த பயங்கரவாதி அவர் எங்கள் பட்டியலில் இருந்தார்,அவர் ஏனைய நாடுகளிற்கும் பிராந்தியங்களிற்கும் செல்வதற்கு முன்னர் தனது நாட்டில் இருக்கவேண்டியவர்எனவும் அவர் தெரிவித்துள்ளார்

சொலைமானி பக்தாத்விமான நிலையத்தில் வந்திறங்கியதை நான் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன் என டிரம்ப்தெரிவித்துள்ளார்.

வானத்தில் பல மைல்களிற்கு அப்பால் உள்ள கமராக்கள் மூலம் பார்த்துக்கொண்டிருந்த இராணுவ அதிகாரிகள் தெரிவிப்பதை நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள்இருவரும் ஒன்றாகயிருக்கின்றனர் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் சேர் அவர்கள் உயிர்வாழ்வதற்கு இன்னமும்  இரண்டு நிமிடங்களும் 11 செகன்ட்களும் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

5 comments:

  1. "அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்".
    (அல்குர்ஆன் : 3:169)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Bro Fassy. இது shiaa kalukku porundathu... Soleimani ஒரு shiaa....

    ReplyDelete
  3. Aslam bro...shia sunnindu piricchi pesa vaanam..kalima sonna ellarum muslimthan

    ReplyDelete
  4. Please understand the differences between Shunni & Shia before to comment.

    ReplyDelete
  5. ஷியா அல்லது சுன்னி எல்லாரும் கலிமா சொன்னவ்ங்க அது சரி தான். எங்களுக்கு ஒருத்தரை பார்த்து காபிர் என்றோ நரகவாதி என்றோ சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது அது மறைவான ஞானம்.

    ReplyDelete

Powered by Blogger.