Header Ads



இலங்கை முஸ்லிம் தலைமைகளின், நிலைப்பாடு எப்படி இருக்கும்...?

"பலஸ்தீன மண்ணும்; மக்களும் விற்பனைக்கில்லை" என்று பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஆகியோர் கூறிய வார்த்தைகள் - இந்த நாட்களில் மீண்டும் மீண்டும் காதுகளுக்குள் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி ரம்ப்பினால், பலஸ்தீன் - இஸ்ரேயில் பிரச்சினை தீர்விற்காக முன்வைக்கப்பட்ட "deal of the century" (நூற்றாண்டின் உடன்பாடு) என்றழைக்கப்படும் முன்மொழிவு - இஸ்ரேலுக்கு சார்பாக பாலஸ்தீனத்தின் தலைநகர் ஜெரூசலத்தை - இஸ்ரேலின் தலைநகராக அங்கிகரிப்பதோடு - ஜோர்டானின் ஒரு பகுதியை இஸ்ரேலின் நிருவாகத்தின் கீழ்கொண்டு வரும் அங்கிகாரத்தையும் வழங்குகிறது.

ஏலவே, பலஸ்தீன் - இஸ்ரேயில் பிரச்சினை விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட two state policy (இரு தேசக்கொள்கை) என்பதையும் ரம்பின் முன்மொழிவு இருட்டடிப்பு செய்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, "பலஸ்தீனுக்கு ஒரு நாடு - இஸ்ரேலுக்கு ஒரு நாடு" என்ற அரபு நாடுகளின் முன்மொழிவை இல்லாமல் செய்கிறது எனக்கொள்ளலாம்.

ரம்ப்பினால், தீர்வாக முன்வைக்கப்பட்ட இந்த "deal of the century" யின் முதற்கட்டமாக - இந்த தீர்வை ஏற்றுக்கொண்டால் 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பலஸ்தீனத்தில் முதலிடப்படும் என்ற ஆசையை - அமெரிக்கா சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் பலஸ்தீனர்களுக்கு காட்டியது. அதனை ரம்ப்பின் ஆலோசகரான அவரது மருமகன் குஸ்னர் முன்வைத்தார்.

இந்த முதலீடுகள் - வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, உற்பத்தி துறை போன்றவற்றில் அபிவிருத்தியை கொண்டு வரும் - அதனூடாக பலஸ்தீனர்கள் மேம்பட்ட வாழ்வை வாழலாம் என்ற ஆசை காட்டப்பட்டு - பலஸ்தீன மண்ணை கபளிகரம் செய்யும் சதி அரங்கேற்றப்பட்டது.

இந்த சதிகள் எல்லாவற்றையுமே பலஸ்தீன சமூகம் ஒற்றுமையாக ஒரே குரலில் நிராகரித்து நிற்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இதையே இலங்கை சூழலில் ஒப்பிட்டு பார்த்தால் - நமது முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?.....

👉🏿பாரம்பரிய மண்ணையும் மக்களையும் விட - அபிவிருத்தியே முக்கியம் என்று ஒரு தரப்பு கூறிக்கொண்டு - அந்த காசுக்கு பின்னால் போயிருக்கும்.

👉🏿குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் தலைவரை சுட்டிக்காட்டி - அவர் இந்த திட்டத்தை எதிர்ப்பதால் நாம் ஆதரிப்போம் என்று இன்னொரு தரப்பு கிழம்பி இருக்கும்.

👉🏿பலமான சக்திகள் இந்த திட்டத்தை முன்வைப்பதால் - அந்த பலமான சக்திகளின் திட்டத்தை அங்கிகாரித்து ஆதரவு செய்வதே நமக்கிருக்கும் ஒரே வழி என்று மற்றொரு தரப்பு - மடிச்சிக்கட்டிக்கொண்டு நின்றிருக்கும்.

இது வரலாற்று அனுபவங்களாக நாம் இலங்கை சூழலில் கண்டவை. கண்டுகொண்டு இருப்பவை.

இனவாத சக்திகள் முஸ்லிம்களின் மீது நேரடியாகவும் - மறைமுகமாகவும் அழிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு - கொண்டு முற்றுகை செய்திருக்கும் சூழ்நிலையில் - அதிகாரத்திற்காக வாய்மூடி மௌத்திருப்பதும் - அவற்றை நியாயப்படுத்தி அரச விசுவாசத்தை வெளிக்காட்டுவதையும் - நம்மில் சில முஸ்லிம் தலைமைகள் தமது அதிகாரத்திற்காக இன்றுவரை செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இவர்களை, தமது இயலாமையால் மக்களும் கண்டும் காணாமல் விடுவது அல்லது அற்ப விடயங்களை எதிர்பார்த்து பூஜிப்பது - ஒரு நாளில் இலங்கையில் தலைநிமிர்ந்து நடக்கின்ற ஒரு முஸ்லிமை காண்பது அரிது என்ற நிலையை தோற்றுவிக்கும்.

முஸ்லிம்கள் வெறும் உயிர்வாழ சுவாசிக்கும் விலங்குகளாக வீதிகளில் காண்போம்.

அதற்கு முன்னர் விழித்துக்கொள்ள - நம்மை நோக்கி வரும் தேர்தலையாவது பயன்படுத்துமா நமது சமூகம்.

- AL Thavam -

1 comment:

  1. ஏன் இதுக்கு முதல் இங்குள்ள முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று நாங்கள்தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று மார்த்தட்டிக் கொண்டு திரிந்தவர்கள், எனக்கு இத்தனை அமைச்சு வேண்டும் எனக்கு இத்தனை பிரதி அமைச்சு வேண்டும் என்று பேரம் பேசி விலை போக வில்லையா? எல்லாரும் செய்து எல்லாம் அனுபவித்து விட்டு வந்துதான் இப்போது வந்துதான் "தலை நிமிர்ந்து வாழ வேண்டும்", "இனி முஸ்லிம்களை காண்பது அரிது" என்ற புருடாக்களை பேசுகிறார்கள்.

    எல்லாக்காலமும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. அது போன தேர்தல்ல நன்றாகவே தெரிந்திருக்கும் இங்குள்ள அரசியல் நடத்தும் வியாபாரிகளுக்கு. என்ன செய்ய இன்னமும் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு நம்பி வாக்கு போடும் மக்கள்தான் முட்டாள்கள்.

    கடந்து வந்த ஆட்சிகளில் எல்லாம் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் இருந்து ஒன்றும் செய்யாமல் வாய்மூடி மௌனிகளாய் இருந்து விட்டு இப்போதுதான் தூக்கத்தில் இருந்து கண் விழித்து வந்தவர்கள் போல் முஸ்லீம் சமூகத்தை காப்பாற்ற புறப்பட்டு இருக்குகிறார்கள்.

    அடுத்த தேர்தல் முடிந்த கையோடு அடுத்து வரும் அரசங்கத்தோடு இணைந்து எவ்வாறு பதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று இப்போதே கணக்கு போட ஆரம்பித்து இருப்பார்கள் இந்த "முஸ்லீம் தனித்துவ அரசியல் கனவான்கள்"

    தனித்துவ அரசியல் என்று கூறிக் கூறியே முஸ்லீம் மக்களின் வாக்குகளை சேகரித்துக் கொண்டு போய் பேரம் பேசி பதவிகளை பெற்று ஜால்ரா அடிக்கும் இத்தகைய இழிவானவர்கள்தான் இன்று ஒட்டுமொத்த சமூகத்தையும் மற்ற இனத்தவர்களால் இழிவாக பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்து நடுத்தெருவில் விட்டவர்கள்தான் இன்று வந்து கோசம் போட்டு கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். மானம் கெட்ட சூடு சொரணை அற்றவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.