Header Ads



குவாசிம் சுலைமானியை போட்டுத்தள்ள குறிவைத்த பிரிட்டன் - இறுதிநேரத்தில் திட்டம் கைவிடப்பட்டது

அமெரிக்க வான்படையால் படுகொலை செய்யப்பட்ட ஈரானிய தளபதி குவாசிமை 2007 ஆம் ஆண்டே பிரித்தானியா குறிவைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் SAS என்ற சிறப்பு வான்படை குறித்த திட்டத்தை செயல்படுத்த தயாரானதாகவும் ஆனால் கடைசி நொடியில், அப்போதைய தொழிலாளர் கட்சி வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஈரானிய குத்ஸ் படைகளின் தலைவர் குவாசிம் சுலைமானி பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ள நிலையில்,

கடந்த 2007 ஆம் ஆண்டே பிரித்தானிய சிறப்பு வான்படையால் குவாசிம் குறிவைக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

2007 காலகட்டத்தில் குவாசிம் சுலைமானி தெற்கு ஈராக்கில் ஈரானிய சார்பு போராளிக்குழுக்களை ஆதரிப்பதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் போராளிக்குழுக்களானது பிரித்தானிய ராணுவத்தினரை வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் மிரட்டி வந்துள்ளனர். இதில் பிரித்தானிய தரப்பில் பெரும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கு முடிவு கட்டவும், தகுந்த பதிலடி வழங்கும் பொருட்டும் பிரித்தானியாவின் SAS என்ற சிறப்பு வான்படை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

குவாசிம் சுலைமானியை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டமானது, அப்போதைய வெளிவிவகார செயலர் டேவிட் மிலிபாண்ட் என்பவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் பாஸ்ராவை தளமாகக் கொண்ட ஒரு மூத்த பிரிட்டிஷ் இராணுவ பிரமுகர் இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளும் விவகாரம் இதுவென்றும், ஈரானியர்களை கொல்வதற்கு உத்தரவிட முடியாது என அப்போது டேவிட் மிலிபாண்ட் கூறியதாகவும் அந்த இராணுவ பிரமுகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் ரகசிய கண்காணிப்பிலேயே அப்போது குவாசிம் இருந்தார், ஆனால் இந்த வகையான செயல்பாட்டை முன்னெடுப்பதில் லண்டனில் உள்ள தலைவர்கள் அப்போது தயாராக இல்லை என்பதால் நாங்கள் செயல்பாட்டை நிறுத்த வேண்டியிருந்தது என்றார் அந்த இராணுவ அதிகாரி.

2003 முதல் 2011 வரை ஈராக் போரின் போது மொத்தம் 179 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.