Header Ads



முஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்று வைத்திய துறைக்கு தெரிவான மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிக்காவின் வீட்டிற்கு மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும் திருகோணமலை தெவனிபியவர இந்ரா ராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை (07.01.2020) மாலை விஜயம் செய்தார்.

இதன்போது முஸாதிகாவும் அவரது பெற்றோரும் தேரரை முக மலர்ச்சியோடு வரவேற்றனர். அதன்பின் தேரர் முஸாதிகா கல்வி கற்று வசித்துவந்த வீட்டினை பார்வையிட்டதுடன் கலந்துரையாடியதோடு அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.

அத்தோடு தனது வாழ்த்தினை தெரிவித்ததோடு முஸாதிக்காவின் உயர்படிப்புக்காக மாதாந்தம் நிதி வழங்கி உதவி செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் பௌத்த மதகுரு ஒருவர் இஸ்லாமிய மாணவி ஒருவரை பார்க்க வந்து பாராட்டியமைக்காக மூதூர் மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். 

இதன் பின் விகாரதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

திருகோணமலை மாவட்டத்தில் இஸ்லாமிய மாணவி ஒருவர் முதலாம் இடம்பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இந்த மாவட்டத்தில் மூவின மக்களும் வாாழ்கின்றார்கள் என தெரிவித்தார்.

அதேவேளை இந்த மாணவியின் படிப்புக்கு உதவி செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. இந்த தேரரை போல் இன்னும் ஒரு சில தேரர்கலின் மனதில் இருக்கும் இனவாதம் இல்லாமல் போனால் எமது நாட்டில் இருக்கும் இனவாதம் முடிந்து விடும்.வாழ்த்துக்கள் தேரரே

    ReplyDelete
  2. நாட்டின் அபிவிருத்திக்கு,
    மனிதம் களின் முதிர்ச்சி தன்மை, மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்படும் பொருளாதார அழிப்புகள் மிகப் பங்களிப்பு செலுத்தும்.
    இப்படியான நல்ல மத தலைவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணம்...

    ReplyDelete
  3. நாட்டின் அபிவிருத்திக்கு,
    மனிதம் களின் முதிர்ச்சி தன்மை, மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்படும் பொருளாதார அழிப்புகள் மிகப் பங்களிப்பு செலுத்தும்.
    இப்படியான நல்ல மத தலைவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணம்...

    ReplyDelete
  4. We got to build on this event and embrace reciprocally.

    ReplyDelete
  5. We got to build on this event and embrace reciprocally.

    ReplyDelete
  6. Most of "thero"es are good. just a small number of them only working for private agenda...

    ReplyDelete
  7. Even a Buddhist Clergy has visited this particular student, but so called Muslim leaders, especially Rizvy Mufti or any other members of ACJU still have not expressed their support to this Muslim student. What a shame on them.

    ReplyDelete
  8. good work thero

    ReplyDelete

Powered by Blogger.