Header Ads



தமிழ்ப் பிரதேசங்களில், முஸ்லிம்கள் வியாபரம் செய்வது தடுத்துநிறுத்தம் - ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - 

தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் வியபாரிகளைத் தடுக்கும் அநீதியை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா. சந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சில அமைப்புக்கள் முஸ்லிம் வியாபாரிகள் தமிழ் பிரதேசங்களில் வியாபாரம் செய்ய முடியாது என்று கூறி வருகின்றனர். அதற்கும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சந்திரகுமார் தெரியப்படுத்தினார்.

இந்த விடயம் தொடர்பாக வியாழக்கிழமை 02.01.2020 ஊடகங்கசளுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட சிலர் தற்போது எமது ஜனாதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு இன விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் மௌனமாக இருந்துவிட்டு தற்போது முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக செயற்படுகின்றனர். இதற்கும் எமது பொது ஜன பெரமுன கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எமது ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மை மக்கள் அனைவரும் சம உரிமையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

மட்டக்களப்பில் முஸ்லிம் வியாபாரிகள் அச்சமின்றி எங்கும் சென்று வியாபாரம் செய்யலாம் அதனை யாரும் தடுத்தால் என்னிடம் முறையிடுங்கள் நான் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன்.' என்றார்.

4 comments:

  1. பாராட்டுக்கள் நல்ல விடயம்

    ReplyDelete
  2. இது சாதாரணமாக இலங்கையின் நாலாபுறமும் காலாகாலமாக நடைபெறும் நடைமுறைகள் ஆகும் இதனை வங்குரோத்து அரசியல் சாக்கடைகள் சில குழப்பி வருவது கவலையான விடயம்.
    உங்களைப் போன்ற சிலர் முன்வருவதன் மூலமே இயல்பு வாழ்க்கை முறை உயிரோட்டமாகும்.

    ReplyDelete
  3. தமிழ் முஸ்லிம் மக்களிடை நட்ப்பும் ஆயிரம் பிரச்சினைகளும் கொண்டாடமும் விவாதங்கள் இருக்கலாம் அது இயல்பானது. ஆயிரம் அரசியல் சிக்கல்கள் கூட வரலாம். ஆனால் கிழக்கின் சமூக பொருளாதார அபிவிருத்தி வளற்சி என வந்தால் தமிழரும் முஸ்லிம்களும் கூடி ஆலோசித்து கைகோர்த்து முன்நிற்க்கவேண்டும். அபிவிருத்திக்கும் ஐக்கியமாக பங்களித்தல் கிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார கலாச்சார அத்திவாரத்தை இரு தரப்பும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஒன்றுக்கொன்று ஆதாரமான வர்த்தகம் விவசாயம் மீன்படி மந்தை வளர்ப்பு போன்றவற்றின் அபிவிருத்தி தமிழ் முஸ்லிம் உறவிலேயே தங்கியுள்ளது. முழு கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் பொருளாதார நடவடிக்கைகள் பாதுகாக்கப் படுதல் வேண்டும். 2020 புது வருடத்தில் வர்தகதடையில் இருந்து கல்முனை வடக்கு பிரச்சினைவரைக்கும் தமிழ் முஸ்லி உறவின் புற்று நோய்கள் எல்லாம் இனங்கண்டு தீர்க்கப்படவேண்டும். சுபீச்ட்சமடைந்து கிழக்கு நிமிர எல்லா தரப்பும் முன்வந்து ஒத்துழைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.