Header Ads



சீனர்கள் இலங்கையில் புறக்கணிக்கப்படுவதாக கவலை

சீன நாட்டவர்கள் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சில சம்பவங்கள் குறித்து சீன அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸை கொண்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொது உணவகங்களில் மற்றும் ஏனைய மக்கள் கூடும் இடங்களில் இருந்து அவர்கள் தவிர்க்கப்பட்டமை கவலையளிப்பதாக சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து சீன அதிகாரிகள் அரசாங்கத்தின் விசேட செயலணியை நேற்று சந்தித்த போது தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த பிரச்சினை ஜனாதிபதி செயலகத்துக்கு உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை சீன நாட்டினர் புறக்கணிக்கப்படக்கூடாது என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இலங்கை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இதற்கிடையில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டால் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. சீனர்களால் இலங்கையருக்கு வய்ரஸ் பரவாமல் இருக்க சீன தூதரகம் உத்தரவாதம் வழங்குமா ?

    ReplyDelete
  2. Antha virus unnal paravinaal?
    Be aware of Almighty Allah bro

    ReplyDelete
  3. Chinese are no harm if they are living in Sri Lanka, but if they have come to Sri Lanka recently as visitors they may be suspected if they have some signs , but not to be harassed, ridiculed, frowned upon. Let us handle the situation rationally and humanely please.Be it Chinese or anyone for that matter,

    ReplyDelete

Powered by Blogger.