Header Ads



கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதால் பாடசாலைகளை மூட, தீர்மானித்ததாக பரவிய செய்தியில் உண்மையில்லை

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளமையால் சீனாவின் வுஹான் நகருக்கு செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், அங்குள்ள 30 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியாது என சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று -28- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுசில் பிரேமஜயந்த இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர்,

இந்த மாணவர்களின் உடல் நலம் மற்றும் உணவு உட்பட ஏனைய தேவை சம்பந்தமாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்தும் விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வுஹான் நகரில் இருந்த 557 இலங்கையர்களில் 204 பேர் ஏற்கனவே இலங்கை வந்துள்ளனர். மீதமுள்ள ஏனையோரை துரிதமாக நாட்டுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீன பிரஜை ஒருவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதால், பாடசாலைகளை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பரவி வரும் செய்தியில் எந்த உண்மையில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.