Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவுக்கு, டுபாய் வரும்படி அழைப்பு

அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித் தலைவர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டுமென்ற தனது எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஐக்கிய இராச்சியத்திற்கு வருகைத் தருமாறு முடிக்குரிய இளவரசர் ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

முடிக்குரிய இளவரசரின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவரது அழைப்பினையும் ஏற்றுக்கொண்டார். இது இருநாடுகளுக்குமிடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் பொதுவான அபிலாஷைகள் தொடர்பில் கலந்துரையாடவும் சிறந்த வாய்ப்பாக அமையுமென்பதால் இருதரப்பினரும் இதற்கு இணக்கம் தெரிவித்தனர்.  


2 comments:

  1. இலங்கையை பொருத்தமட்டில் வளைகுடா நாடுகளின் உறவும் அதன் உதவிகளும் தேவைப்பாடாகும்

    ஆனால் இவரே இலங்கை நாட்டு ஜானாதிபதி அழைப்பது இதட்கு பின்னால் அமெரிக்காவின் வேண்டுகோல் இருப்பதாக தென்படுகின்றது

    ReplyDelete
  2. Very good change to develop our economy our tourism.

    ReplyDelete

Powered by Blogger.