Header Ads



இடமாற்றம் தேவையில்லை, ஓய்வு பெறப்போகின்றேன் - மட்டக்களப்பு அரசாங்க அதிபர்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

தனது ஓய்வுக்காலம் முடிவதற்கு சற்று முன்னதாகவே தான் ஓய்வு பெற்றுச் செல்வதற்குத் நி;ர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினை சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சனிக்கிழமை (25.01.2020) மாலை மாவட்டச் செயலகக் காரியாலயத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 25.01.2019 இன்று வரையில் அரச சேவையில் 32 வருடங்களையும், ஒரு மாதத்தையும் 10 தினங்களையும் நிறைவு செய்திருக்கின்றேன்.

ஒரு பட்டதாரி ஆசிரியராக அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட நான் படிப்படியாக பதவி உயர்வுகளைப் பெற்று மாவட்டத்தின் அரசாங்க அதிபராக இருந்து தற்போது தவிர்க்க முடியாத காரணத்தினால் எனது ஓய்வுக்காலம் முடிவதற்கு முன்னர் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் என்ற கருதுத்து உலா வருகின்றது.

அதனால் மக்கள்  பல்வேறு குளப்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட நிருவாகத்தைக் கவனிகும் அரசின் பிரதிநிதிதான் அரசாங்க அதிபராவார். காலத்திற்குக் காலம் மக்களால் உருவாக்கப்படுகின்ற அரசின கொள்கைகளை, சரியாகவும், நேர்த்தியாகவும் செயற்படுத்துவதே அவருக்கான பணியாகும்.

இதற்கான நியமனத்தை மாகாணசபைகள் உளுராட்சி அலுவல்கள், அமைச்சு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், இலங்கை நிருவாக சேவையின் அதி உயர் வகுப்பான  அதிவிசேட தரத்தைச் சார்ந்த அனுபவம், நேர்மை, திறமை, விவேகம் என்பவற்றின் அடிப்படையில், இதற்கான அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவர்.

அண்மைய செய்திகள் கறைபடிந்த கைகளும், கடத்தல் பேர்வழிகளும், கலகக் காரர்களும், கூட்டாகவோ, தனித்தோ, இப்பதவிக்கான உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்கின்றார்களோ என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அரசுடன் பேரம்பேசுவதாகவும், தமது பதவிகளை இராஜினாமா செய்வதாகவும், மிரட்டுவதாகவும் வெளியாகும் தவவல்களுக்காக வேதனையடைகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அது பற்றி எமக்கு இதுவரையில் உத்தியோக பூர்வமான அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லை.

இலங்கை நிருவாக சேவையில் எவித குற்றங்களும் இளைக்காமல், எதுவித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல், சேவையிலுள்ள என்னை எதுவித முன்னறிவித்தலுமின்றி, இடமாற்றம் வழங்கப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நான் ஓய்வு பெறுவதற்கு இருந்து வெறுமனே 10 மாதங்களும் 18 நாட்களும் உள்ள எனக்கு திடீர் இடமாற்றம் என்றால் அதனை என்னால் கொள்ள முடியாததன் காரணமாக நான் முன்னராகவே பதிவியில் இருந்து ஓய்வு பெறுகின்றேன்.

எனது கட்டாய ஒய்வு தினமான 21.12.2020 முன்னதாக சுய விருப்பிற்கான ஓய்விற்காக அமைச்சரவைக்கு விண்ணப்பித்துள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுடன் நான் தொடர்ந்து ஏதோவொரு வகையில் சேவையில் இணைந்திருப்பேன்.' என்றார்.

2 comments:

  1. This is Karuna and gang's attahaasamo...!!!!!

    ReplyDelete
  2. PLEASE WAIT AND SEE THIS GENTLEMEN WILL CONTEST NEXT PARLIAMENT ELECTION UNDER TNA.HE WILL GIVE A GOOD FIGHT AGAINST KARUMAYA AMMAN AND VIYALABAGAVAN GROUP.

    ReplyDelete

Powered by Blogger.