Header Ads



மஹிந்த ராஜபக்ஷவின், முதல் காதல் இதுதான்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் ஊடாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி வீழ்ச்சியடைய இடமளிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மொரடுவை புதிய கட்சி அலுவலகத்தை நேற்று (02) திறந்து வைத்து கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதல் காதல் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை வீழ்ச்சியடைய இடமளிக்காமல் பாதுகாக்குமாறு அவர் தன்னிடம் கோரியதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.