Header Ads



ஈரானின் டபள் கேம்...! வாய்ச்சொல்லில்தான் வீரர்களா..?

அமெரிக்கா ஈரானின் முக்கிய ஜெனெரல் ஒருவரைக் கொலைசெய்தது. ஈரான் கொடுத்த "பதிலடி" அமெரிக்க இராணுவ முகாம்கள் இரண்டிலிருந்த இரண்டு பழைய கட்டிடங்களின் கூரைகளில் ஓட்டைபோட்டது மாத்திரம்தான்.

ஈரான் தனது ஏவுகணைகளை ஏவுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பே அங்குள்ள இராணுவத்தினருக்கு குறித்த கட்டிடங்களை விட்டும் விலகியிருக்குமாறு அறிவித்திருந்தது; அவர்களும் விலகியிருந்தார்கள். தங்களின் ஏவுகணைகள் தவறிப்போயாவது ஒரு அமெரிக்கரையாவது காயப்படுத்தி விடக்கூடாது என்று அவர்கள் பிரார்த்தனை வேறு செய்திருக்கவேண்டும்.

நாம் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும்: எல்லா முஸ்லிம் நாடுகளையும் போல ஈரானியரும் வாய்ச்சொல்லில்தான் வீரர்கள்; செயலில் கோழைகளே. "அமெரிக்காவுக்குச் சாவு!" என்று கோஷம்போட்டுக்கொண்டே 56 ஈரானியர்கள் நெரிசலில் அகப்பட்டு மரணித்திருக்கின்றார்கள். ஈரானிய அரசு அந்நாட்டு மக்களை இவ்வாறு கோசம்போடவும், அனாவசியமாகச் செத்துமடியவுமே பழக்கப்படுத்தியிருக்கின்றது.

அமெரிக்காவிற்கு எதிராக ஈரானோ ஏனைய எந்த முஸ்லிம் நாடோ எந்தவிதமான தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை. இதற்கான காரணம் இவர்கள் தேசிய அரசுகளாகப் பிரிந்து நிற்பதுதான். எப்போது முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒரே அரசியல் கொடியின் இணைகின்றார்களோ அன்றுதான் அவர்களால் தம்மைக் காக்கமுடியும்.

சவூதி அரசு அமெரிக்காவின் எடுபிடி என்று நாம் எடுத்துச் சொன்னபோது சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு கூட்டம் மல்லுக்கு வந்தது; ஐஸிஸ் இரத்த வெறிகொண்ட பாசிஸ அமைப்பு என்று சொன்னபோது இன்னுமொரு கூட்டம் சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு கூட்டம் மல்லுக்கு வந்தது; இப்போது சொல்கின்றோம்: ஈரானும் அமெரிக்காவின் எடுபிடியே: அது எமன் நாட்டிலும், சிரியாவிலும் மனிதப்படுகொலைகள் செய்த / செய்துகொண்டிருக்கின்ற ஒரு நாடு. ஈராக்கிற்குள்ளுள்ளும், ஆப்கானிஸ்தானிற்குள்ளும் அமெரிக்க ஆக்கிரமிப்பை நிறுவ உதவிய / உதவிக்கொண்டிருக்கின்ற நாடு. இவற்றிற்கான ஆதாரங்கள் நிறைந்துகிடக்கின்றன. ஈரானின் தேசிய அரசால் முஸ்லிம்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.

- Mohamed Faizal -

8 comments:

  1. It's completely true.well said.but Muslims think Iran support Muslims.never ,never it happens.

    ReplyDelete
  2. If they aren't Muslim countrie
    Then why Saudi admit them for Haj?

    ReplyDelete
  3. MUNAFIQ ALWAYS DOUBLE GAME.SHIYA
    NEWER EVER WITH ISLAM.THEY ARE ONLY ACTING.US AMERICA AND SHIYA IRAN SAME POLICY.

    ReplyDelete
  4. it sounds like Israeli media

    ReplyDelete
  5. கட்டுறையாளர் அமெரிக்க ஈரானிய உறவை தவறாக புரிந்துள்ளார். அமேரிக்காவும் ஈரானும் தம்மை ஒருவருக்கொருவர் எதிரிகளாக வெளி உலகிற்கு காட்டுவதற்கான ஒரு நாடகமே அன்றி வேறில்லை. அவர்களின் இருறுதி இலக்கு வலைகுடாவில் உள்ள முஸ்லிம் நாடுகளின் கனிய வளங்கள் மாத்திரம் தான். அமேரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளின் வளங்களை சுறண்ட வேண்டும் என்று ஆசை, ஈரானுக்கு முஸ்லிம்களை பழிதீர்க்க வேண்டும் என்ற ஆசை. இதனை இரு நாடுகளும் மிக கட்சிதமாக காய் நகர்த்துகின்றனர்.
    ஒருவேலை அமேரிக்க ஈரான் யுத்தம் ஆரம்பிக்குமாக இருந்தால் ஈரான் முஸ்லிம் நாடுகளைத்தான் தாக்கி அழிக்குமே அன்றி மாற்றமாக அமேரிக்காவுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படப் போவதில்லை.

    ReplyDelete
  6. I’ve already told “nothing will happen to Iran and North Korea”

    ReplyDelete
  7. General Soleimani has played very important roles in spoiling American's goals in Syria, Lebanon and even in Iraq in recent times. The US has taken the revenge for their defeat by killing Soleimani and also with this, they wanted to create an opportunity to destroy Iran in an all-out war especially to roll back Iran's recent technological achievement to zero. In this situation, Iran can not react like what an ordinary person feels. Iran has the responsibility to tactically protect itself.

    The last attack on Iraq military base, where US forces were stationed, is a symbolic attack which displayed the capability of Iran to attack any location in the middle east with pinpoint accuracy and if necessary with a lethal warhead. The missile attack was a precisely calculated attack with diplomatic considerations in a way that the US will realize that the war is not an option for them also and the casualties the attack caused may not necessarily force the US to fall into the war. It seems like Iranians made the point very clear to Trump.

    ReplyDelete
  8. தாங்கள் நினைத்த மாதிரியெல்லாம் சில்லறைத்தனமாக சர்வதேச விடயங்களை அலசுவதை விட்டுவிட வேண்டும். அவற்றைப்ற்றி அலச எங்களைப்போன்ற பலர் இருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.