Header Ads



ஈரானின் செயலினால் குடும்பத்தை இழந்தவருடன், கண்ணீர் விட்டழுத கனடா பிரதமர்

ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தில் தனது மனைவியையும் மகனையும் பறிகொடுத்த ஈரானிய கனேடியர் ஒருவர், ஜஸ்டின் ட்ரூடோ என்னுடன் அழுதார் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல வாழ்வைத் தேடி குடும்பத்துடன் கனடா வந்த Shahin Moghaddam, தனது மனைவி Shakiba Feghahati (39)ஐயும் மகன் Rosstin Moghaddam (10)ஐயும் முதல் முறையாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ஈரானில் உறவினர்களை சந்தித்துவிட்டு கனடா திரும்புவது அவர்கள் திட்டம். அதேபோல் உறவினர்களுடன் நேரம் செலவிட்டுவிட்டு Shahinஇன் மனைவியும் மகனும் கனடா திரும்புவதற்காக ஏறிய விமானத்தைத்தான் ஈரான் சுட்டு வீழ்த்தியது.

வாழ்வே முடிந்தது என வாடி நின்ற Shahinஐயும், மற்ற ஈரானிய கனேடியர்களையும் வெள்ளியன்று சந்தித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

அப்போது, தனது கதையைக் கேட்டு தன்னுடன் கண்ணீர் விட்டு அழுதார் ட்ரூடோ என்று கூறும் Shahin, அவர் ஒரு மகா மனிதர் என்கிறார்.

அவரது அரசியல் குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதர் என்கிறார் Shahin.

கணினி பொறியாளரான Shahin, ஈரானுக்கு செல்ல இருப்பதாகவும், ஆனால் விமானத்தில் செல்வதா அல்லது காரில் செல்வதா என முடிவு செய்யவில்லை என்கிறார்.

விமானப் பயணமே கனேடிய ஈரானியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி விட்டாற்போலுள்ளது.

No comments

Powered by Blogger.