Header Ads



அமெரிக்கா - ஈரான் பதற்றத்திடையே, சிரியாவிற்கு பறந்த புடின்


அமெரிக்காவிற்கும் சிரிய நட்பு நாடான ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புடின், சிரியாவில் அசாத்தை சந்தித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சிரியாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தலைநகர் டமாஸ்கஸில் ஒரு விமானத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் நாட்டின் கிரெம்ளின் படைகளின் தலைமையகத்திற்கு சென்றார்.

அசாத்துடன் சேர்ந்து இராணுவ விளக்கங்கள் குறித்து கேட்டறிந்த புடின், 'சிரிய அரசு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதற்கான' முயற்சிகளைப் பாராட்டினார்.

கடந்த வாரம் ட்ரோன் தாக்குதலில் இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, ரஷ்யா மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் முக்கிய நட்பு நாடான ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 2017ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக புடின் சிரியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

இதுகுறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், தற்போதைய வருகைக்கு அசாத் புடினுக்கு நன்றி தெரிவித்ததாகவும், சிரிய உள்நாட்டுப் போரின்போது மாஸ்கோவின் உதவியைப் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் 2014 முதல் ரஷ்யா சிரியாவுக்கு உதவி வருகிறது. 2017 ஆம் ஆண்டில் மேற்கு லடாகியா மாகாணத்தில் உள்ள நாட்டின் க்மிமிம் விமான தளத்தை ஆய்வு செய்தபோது புடின் கடைசியாக சிரியாவிற்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.