Header Ads



கொரோனா தொடர்பில் மகிந்தவிடம், கோரிக்கை விடுத்துள்ள ரணில்

(எம்.மனோசித்ரா)

சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான முகக் கவசங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதனால் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு உதவுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சீனப் பெண்னொருவர் இலங்கையில் இணங்காணப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக முகக்கவசங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரலாயத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

சுகாதார பாதுகாப்பான முகக் கவசங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. எனவே இலங்கைக்கு துரிதமாக அவற்றைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய அரசாக இந்தியா காணப்படுகிறது என்பதால் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

தனது கோரிக்கை தொடர்பில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். அத்தோடு கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்து ஏற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இதன் போது ரணில் விக்கிரமசிங்க பிரதமரிடம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிந்திருப்பதானால் , அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி ஆலோசனை வழங்கியிருக்கிறது. 

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளதால் அவர்களுக்காக விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 comments:

  1. At least now allow and do not disturb the facecover practise of muslim women.... If needed ask others also to do face covering at government and private offices.....

    ReplyDelete
  2. @Mohamed,
    Face covers used by Muslim women do not filter germs and bacteria but medically approved face masks do. Comparing face masks with Ninja type face veils is like comparing Apples and Oranges.

    ReplyDelete

Powered by Blogger.