Header Ads



மரண தண்டனை விதிக்குமாறு நீதிபதியிடம் கூறியவருக்கும், நீதிபதிக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் - மஹிந்த

நீதிமன்ற நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்து, எவராவது ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்குமாயின் அழுத்தம் வழங்கியவருக்கும் அந்த தவறை இழைத்த நீதிபதிக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் ஊடக பிரதானிகளுடன் இன்று -20- இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குரல் பதிவுகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு நீதிபதி ஒருவரிடம் கூறமுடியுமாயின் அவ்வாறு கூறியவருக்கும் தண்டனை விதித்தவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்.

மற்றுமொரு மனித கொலைக்கு சிகரான குற்றச்சாட்டு இதுவாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தீர்ப்பிலும் நீதிமன்ற விடயத்தில் தலையீடு செய்யப்பட்டுள்ளமை மிகத் தெளிவாக புலனாகிறது.

முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் அந்த விடயத்தில் தலையிட்டுள்ளமை தெரியவருவதாக ஊடக பிரதானி ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அதுதான் மிகவும் பாரிய நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி அடுத்த தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பிரதமர், அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. "ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.

    -சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்.

    இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும்.

    - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்;

    ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு".

    (அல்குர்ஆன் : 2:178)


    "நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு.

    (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்."

    (அல்குர்ஆன் : 2:179)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.