Header Ads



முஸ்லிம் மக்கள் தற்போது, ஜனாதிபதியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர்


ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தவறான சிந்தனையை விதைத்தனர். எனினும் தற்போது முஸ்லிம் மக்கள் அவருடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் முஸ்லிம் மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கரைத்த அவர்,

“மதங்களுக்கிடையிலான சகவாழ்வு உள்ள ஒரு நாடே பாதுகாப்பான நாடாகும். தேசிய ஒற்றுமை மற்றும் மதங்களுக்கிடையிலான சகவாழ்வு என்பன வெறும் வார்த்தைகளில் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறையிலும் இடம்பெறவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தவறான சிந்தனையை விதைத்தனர். எனினும் தற்போது முஸ்லிம் மக்கள் அவருடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர்.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டால் நாட்டை ஒன்றிணைத்து முன்னோக்கி கட்டியெழுப்ப முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியோடு எமக்கு சிறந்த தலைவரொருவர் கிடைத்துள்ளார்.

நாம் எமது பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். அதன் பிரதிபலன் சகல மக்களுக்கும் கிடைக்கும்” என்றார்.

No comments

Powered by Blogger.