Header Ads



டிரம்பின் சொத்துக்கள் மீதும், தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் முக்கிய ஆலோசகர் வெளியிட்ட டிரம்புக்கு எதிரான பட்டியல் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி தரும் வகையில், முதற்கட்டமாக டிரம்பின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் முக்கிய ஆலோசகரான Hesameddin Ashena இதுவரை டிரம்ப் குவித்துள்ள மொத்த சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்கில் அமைந்துள்ள அவரது முக்கிய சொத்துக்கள், ஹொட்டல்கள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் பிரித்தானியாவில் அமைந்துள்ள சொத்துக்கள் என அந்தப் பட்டியல் நீள்கிறது.

முக்கியமாக குவாசிம் சுலைமானியை படுகொலை செய்ய டிரம்ப் உத்தரவு பிறப்பித்த புளோரிடாவில் அமைந்துள்ள மார்-எ-லாகோ ரிசார்ட்,

வாஷிங்டன் மற்றும் லாஸ் வேகாஸில் உள்ள டிரம்ப் சர்வதேச ஹொட்டல்கள் மற்றும் அவரது நியூயார்க் கோபுரம் மிகப் பிரபலமான் அதன் ஐந்தாவது அவென்யூ நுழைவாயில் என ஈரான் பட்டியலிட்டுள்ளது.

ஈரானின் முக்கிய எதிரி அமெரிக்கர்கள் அல்ல என தெளிவு படுத்தியுள்ள Hesameddin Ashena, எங்களின் முக்கிய எதிரி டிரம்ப் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குவாசிமின் படுகொலைக்கு ஈரான் பதிலடி தர முயன்றால், ஈரானின் கலாச்சார பகுதிகள் மீது தாக்குதல் தொடுப்போம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் டிரம்பின் ஹொட்டல்கள் மற்றும் சொத்துக்கள் என எதுவும் ரகசியமானது அல்ல.

அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் முன்னரே இந்த சொத்துக்களை குவித்திருந்தார். ஆனால் ஈரானின் மூத்த ஆலோசகரின் குறித்த பட்டியலானது ட்ரம்பின் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்திற்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க இருப்பது குறித்த தெளிவான குறிப்பாகும்.

கரில்லா தாக்குதல்களுக்கு பெயர்பெற்ற ஈரானிய குத்ஸ் படைகள், மிக விரைவில் தாக்குதலை முன்னெடுக்கும் என்றே நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.