Header Ads



முகக்கவசங்களை இலவசமாக, வழங்குமாறு சஜித் கோரிக்கை

முறையற்ற வர்த்தகத்தைத் தடுத்து, சுகாதார பாதுகாப்புடன் கூடிய முகக்கவசங்களை இலவசமாக மக்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

சிறிது காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற மருந்துப்பொருட்கள் மாஃபியாவைப் போன்று, முகக்கவச மாஃபியா தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிக்கையொன்றின் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அனர்த்தமொன்று நேர்ந்துள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி மோசடியான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிலர் முயல்கின்றமை கவலைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் நிலவும் அபாய நிலைமையைக் கருத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்புடன் கூடிய முகக்கவசங்களை இலவசமாக மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

2 comments:

  1. இவனூக்கு பைத்தியம்

    ReplyDelete
  2. கட்சிப்பூசலும்,கட்சியின் உள்ளே குழப்பமும், பதவிப்பித்தும் தலைக்கடித்து தடுமாறிக் கொண்டிருக்கும் போது இவருக்கு என்ன புதிய ஞானம். முகக்கவசம் அணிந்துவி்ட்டால் எல்லாம் சரி. கடந்த நாட்களில் முகக் கவசம் அணிந்த பெண்களை பஸ்ஸில் இருந்தும், புகையிரதத்தில் இருந்தும் இறக்கிவிட்டு அவர்களை ஒதுக்கிய சமூகம் இன்று முகக்கவசம் இன்றி வௌியே செல்வது பாதுகாப்பில்லை, எல்லோருக்கும் முகக்கவசம் அணிய அவற்றை உடன் இறக்குமதி செய்ய கட்டளை. என்ன உலகம்!

    ReplyDelete

Powered by Blogger.