Header Ads



கெரோனா வைரஸ், இலங்கையைத் தாக்குமா..?


சீனாவில் வேகமாகப் பரவிவரும் கெரோனா வைரஸ், நாட்டில் பரவாதிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதன் ஒருகட்டமாக விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தடிமன், போன்ற அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தபடவுள்ளனர்.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவும் அபாயம் தற்போது இல்லை எனவும் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் சமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வுஹன் நகரில் குறித்த வைரஸினால் 2 நாட்களுக்குள் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வுஹான் நகரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.