Header Ads



சுலைமானியின் ஆசையை, நிறைவேற்றிய ட்ரம்ப்

சமீபத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று, ஈரான் தளபதி எப்படி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டார் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்த வீடியோவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை முட்டாள், சூதாடி என மோசமாக வர்ணிக்கும் சுலைமானி, வா உனக்காக காத்திருக்கிறோம் என சவாலும் விடுவதைக் காண முடிகிறது.

2018ஆம் ஆண்டு ஜூலை மாதம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரான் ஜனாதிபதியை குறிவைத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அமெரிக்காவை மிரட்டாதே, அப்படி செய்தால் வரலாற்றில் இதுவரை அனுபவித்திராத பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியிருந்தார் அவர்.

சரியாக மூன்று நாட்களுக்குப்பிறகு, ராணுவ தளம் ஒன்றில் உரையாற்றிய சுலைமானி, ட்ரம்பை மோசமான வார்த்தைகளால் வர்ணித்தார்.

ட்ரம்பின் வார்த்தைகள், ஒரு மதுபான விடுதியில் வேலை செய்பவர் அல்லது ஒரு சூதாட்ட விடுதி மேலாளரின் வர்த்தைகளைப்போல் இருப்பதாக ஏளனம் செய்தார் அவர். பின்னர் மிரட்டும் பாவனையில் விரலை உயர்த்தி, மிஸ்டர் ட்ரம்ப், சூதாடியே, எங்கள் பலம் உனக்கே நன்றாக தெரியும்.

வா, உனக்காக நாங்கள் காத்திருக்கிறோம், நாங்கள்தான் உண்மையான ஆண்கள். நீ போரை தொடங்கலாம், ஆனால் அதன் முடிவை தீர்மானிப்பவர்கள் நாங்கள்தான் என்று கூறியிருந்தார் சுலைமானி.

ஒரு போராளியாக புரட்சிக்காக எனது உயிரை தியாகம் செய்து தியாகியாவேன் என்று முழங்கிய சுலைமானியின் ஆசையை 18 மாதங்களுக்குப்பின் நிறைவேற்றியிருக்கிறார் ட்ரம்ப்.

1 comment:

  1. நாகரீகக்குறைவு அழிவுக்குச் சமன்.

    ReplyDelete

Powered by Blogger.