Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவின் மனிதாபிமானம்...!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். 

தமது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் மற்றும் இடைக்கிடையே ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த நாடு என்ற வகையில் இலங்கையர்களால் தற்போது அவுஸ்திரேலிய பிரஜைகள் அனுபவிக்கும் வேதனையை புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார். 

இந்த துயரமான வேளையில் அவுஸ்திரேலிய மக்களுக்காக இலங்கை தேயிலை தொகையொன்றினை நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

1 comment:

  1. Welldon president, nowday's that's only we can do to Australia. But Allso more million animals are lost in this fair it's cannot accept.

    ReplyDelete

Powered by Blogger.