Header Ads



இலங்கை அதிபர்சேவை முதலாம், தரத்திற்கு பதவி உயர்வுபெற்றார் ஷாஜஹான்

நீர்கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபர் ஏம். இஸட். ஷாஜஹான்  இலங்கை அதிபர் சேவையின்   முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதற்கான பதவி உயர்வுக் கடிதத்தை  அரசாங்க சேவை ஆணைக்குழுவின்  கல்விச் சேவைக் குழு இவருக்கு அனுப்பி வைத்துள்ளது. 04-12-2015 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜனாப். ஏம். இஸட். ஷாஜஹானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் சேவையை சேர்ந்தவரும், ஊடகவியலாளரும்  கவிஞரும் எழுத்தாளருமான எம்.இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்) கல்வி முதுமாணி  உயர் பட்டப் படிப்பு, கல்விமாணி பட்டப் படிப்பு ஆகியவற்றை  நிறைவு செய்தவராவார்.

கலாநெஞ்சன் ஷாஜஹன் என்ற பெயரில் எழுதி வரும் இவர் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் , இஸ்லாமியப் பாடல் தொகுதிகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளதோடு, பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். 

கல்விமாணி பட்டம் (தேசிய கல்வி  நிருவகம்), இதழியல் துறையில்  டிப்ளோமா (கொழும்பு பல்கலைகழகம்), மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமா, கணனித் துறையில் டிப்ளோமா என்பவற்றையும் ஜனாப் எம். இஸட். ஷாஜஹான் ஏற்கனவே பெற்றுள்ளார். அத்துடன் அவர் சமாதான நீதவானாகவும் உள்ளார்.

 கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர், கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி. மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

  ஜனாப் ஷாஜஹான் (கலாநெஞ்சன் ஷாஜஹான்) இலக்கியம் மற்றும் சமூக சேவை பங்களிப்புக்காக 'தமிழ்ச் சுடர் ,  'சாமஸ்ரீ தேச கீர்த்தி' , 'கவியத் தீபம்', ' காவிய பிரதீப ஆகிய பட்டங்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 1992 முதல் 1995 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.  அத்துடன்  சுயாதீன தொலைக் காட்சி சேவையில் ஒளிபரப்பான 'முத்துச்சரம்' மற்றும் 'ரசிகர் அரங்கம்' ஆகிய நிகழ்ச்சிகளுக்கு நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை அதிபர் சேவையை சேர்ந்த இவர் பயிற்றப்பட்ட உடற் கல்வி ஆசிரியராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.